கோரிக்கடவு, ஜன. 26- இன்று (26.1.2025) காலை 10 மணி அளவில் பழனி மாவட்டம் கோரிக்கடவு சமுதாய நலக் கூடம் அரங்கில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பழனி கழக மாவட்ட தலைவர் முருகன் தலைமை யேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பொன். அருண்குமார் தொடக்க உரையாற்றினார்.
பழனி கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் திராவிடச் செல்வன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தாராபுரம் கழக மாவட்ட காப்பாளர் புள்ளியான், பழனி மாவட்ட துணை தலைவர் ராமகிருஷ்ணன் பழனி மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தன், தாராபுரம் வழக்குரைஞர் சக்திவேல், பழனி ராதாகிருஷ்ணன், பெரியார் இரணியன், தாராபுரம் மாவட்ட துணை செயலாளர் மாயவன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் பகுத்தறிவாளர்கழக ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சுஎன்னாரெசுபெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் வி.சி.வில்வம், தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள் என்ற தலைப்பில் கழக துணைப் பொது செயலாளர் பிரின்சுஎன்னாரெசு, மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் ஈட்டி கணேசன், பேய் ஆடுதல் சாமி ஆடுதல் அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் மருத்துவர் கவுதமன், சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் முனைவர் வா.நேரு ஆகியோர் தொடர்ந்து வகுப்பு எடுத்து வருகின்றனர்
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்.