சுமார் 16 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் மொழி வடிவில் பேசத் தொடங்கியதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் ஸ்டீவன் மிதன் தெரிவித்துள்ளார். ஹோமோ சேபியன்ஸ் மூளையில் அப்போதே பேசுவதற்கான Broca’s area வளர்ச்சிகள் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். செய்கை மொழி இவற்றிற்கு முன்பே வழக்கத்தில் இருந்திருக்கும் எனவும் சுட்டிக்காட்டுகிறார். அப்படி பேச ஆரம்பித்ததும் மனிதன் முதலில் என்ன வார்த்தை சொல்லியிருப்பான்?