பெரம்பலூர், ஜன.16 பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் என்ற தலைப்பில் அய்ந்தாவது மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தின் துவக்கமாக மாவட்ட செயலாளர் விசயேந்திரன் வரவேற்பு ரையாற்றி, பின்னர் மாவட்டக் கழகம் அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூரில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை பெரியார் பேசுகிறார் என்ற தலைப்பில் மாதாந்திர கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் 11.01.2024 அன்று மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன், மாவட்ட காப்பாளர் அக்ரி ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நடராசன் ஆகியோர்களின் முன்னிலையிலும் பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் 5 ஆவது மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற தலைப்பில் ஒரு அர்ச்சகர் ஆவதற்கு என்னென்ன பயிற்சிகள் பெற வேண்டும் எனவும், ஒரு கோவில் எழுப்புவதற்கு ஆகம விதிகள் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்தும், அவ்வாறு தமிழ்நாட்டில் ஒரு கோவிலாவது ஆகம விதிகள் படி கோவில் கட்டி உள்ளார்களா? என கேள்வி எழுப்பி, சுட்டிக்காட்டி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் சிவசக்தி சிறப்புரையாற்றி னார்.