உலக அளவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பசுமையான சூழல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக ‘Green Mentors’ வழங்கிய 2024 ஆம் ஆண்டிற்கான – ‘‘சர்வதேச பசுமை பல்கலைக் கழக விருது’’ பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு இரண்டாவது முறையாக வழங்கப்பட்டது. அவ்விருதினை, மேரிலாந்து பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணைப் பேராசிரியருமான டாக்டர் அரசு செல்லையா, அமெரிக்காவில் நடைபெற்ற நியூயார்க் பசுமை மாநாட்டில் நேரில் பெற்றார். அவ்விருதை, பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் மகிழ்ச்சியுடன் ஒப்படைத்தார் (சென்னை, 14.1.2025).