மதுரையில் நீதிமன்றங்களில் சமூகநீதிகோரி எழுச்சியுடன் நடந்த ஆர்ப்பாட்டம்

viduthalai
4 Min Read

மதுரை, ஜன.11- உயர்நீதி மன்றங்கள் உயர் ஜாதி மன்றங்களா? நீதிபதி நியமனங்களில் சமூக நீதியை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சட்டத்துறை சார்பாக அறவழி ஆர்ப்பாட்டம் 9.1.2025 வியாழக்கிழமை காலை 10:30 மணி அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

நிகழ்விற்கு திராவிடர் கழகத்தின் சட்டத்துறை துணை செயலாளர் வழக்குரைஞர் நா.கணேசன் தலைமை தாங்கி இந்த ஆர்ப்பாட்டம் ஏன் என்பதைப் பற்றி விளக்க உரையாற்றினார் .நிகழ்வில் திராவிடர் கழக சட்டத்துறை உறுப்பினர் வழக்குரைஞர் பி கனகராஜ் வரவேற்புரையாற்றினார். முழக்கங்களை எழுப்பி நிகழ்வினை திராவிடர் கழகத்தினுடைய தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் ஒருங்கிணைத்தார் திண்டுக்கல் மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் ஆனந்த முனியராஜ் தொடக்க உரையாற்றினார் நோக்க உரையினை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே. வாஞ்சிநாதன் நிகழ்த்தினார். ஆர்ப்பாட்ட விளக்க உரையினை அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளார் வழக்குரைஞர் பசும்பொன்பாண்டியன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் இராம.வைரமுத்து ஆகியோர் நிகழ்த்தினர்.

நிகழ்வில் காங்கிரஸ் வழக்குரைஞர் ஈ.டி. ராஜேந்திரன், வழக்குரைஞர் தியாகராஜன், வழக்குரைஞர் கனகவேல், மாவட்டக் காப்பாளர் தே.எடிசன்ராஜா, மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், மாவட்டச் செயலாளர் இரா.லீ. சுரேஷ், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மதிமுக வழக்குரைஞர் நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வழக்குரைஞர் முத்து அமுத நாதன், மக்கள் சிவில் உரிமை அமைப்பின் வழக்குரைஞர் ஆ.ஜான்வின்சன்ட் தமிழ் புலிகள் கட்சியின் வழக்குரைஞர் கரு.சித்தார்த்தன் ஆகியோர் தங்கள் இயக்கத்தின் சார்பில் கண்டனத்தைத் பதிவு செய்தனர்.

புனிதம்

கொலிஜியம் என்னும் பெயரில் முழுக்க முழுக்க நீதிபதிகள் நியமனம் பார்ப்பனர்கள் கைவசம் இருக்கிறது. 3 சதவீதம் உள்ளவர்கள் இப்போது 10 பேர் உள்ளனர்.நீதித்துறை மீது ஒரு இல்லாத புனிதம் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படி அந்தத்துறை இல்லை.அதனை மக்கள் மத்தியில் கொண்டு சென்று அம்பலப்படுத்த வேண்டும். இப்போது பரிந்துரைக்கப்படும் 4 நீதிபதிகள் பெயருக்கு கொடுக்கப்பட்ட 8 பேரில் 4 பேர் பார்ப்பனர்கள்.97 சதவீதம் உள்ள பட்டியலின,பிற்படுத்தப்பட்ட,சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்கள் நீதிபதியாக ஆக முடியாத நிலைமை இருக்கிறது.இதில் நியாயம் வேண்டும்.கொலிஜியம் என்பது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது உருவாக்கப்பட்டது அல்ல.இப்போது நிகழும் நீதிபதிகள் நியமனம் சமூக நீதிக்கும் சமுத்துவத்திற்கும் எதிரானது.2018க்குப் பிறகு 684 நீதிபதிகள் இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.இதில் 574 இடங்கள் உயர்ஜாதிகளைச் சார்ந்தவர்களுக்கு, பார்ப்பனர்களுக்கு கிடைத்திருக்கிறது. 90 சதவீதம் உள்ள பட்டியல் இன,பிற்படுத்தப்பட்ட்சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்களுக்கு வெறும் 110 இடம்தான் கிடைத்திருக்கிறது50 சதவீத இடஒதுக்கீடு நீதித்துறையிலும் இருந்திருந்திருந்தால் 342 இடம் மற்றவர்களுக்கு கிடைத்திருக்கவேண்டும். கொலிஜியம் முறையால் 232 இடம் கிடைக்கவில்லை.இது அநீதி அல்லவா? இந்துத்துவாவைச் சார்ந்தவர்களை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கும்போது ஒன்றிய அரசு அவர்கள் அரசியல் சார்பு உள்ளவர்கள் என்று நிராகரிப்பதில்லை.ஆனால் மற்றவர்களை முக நூலில் கருத்து பதிவிட்டார்கள் என்பதற்காக மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒப்புதல் கொடுக்காமல் அப்படியே வைத்துள்ளது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சரியான நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

விழிப்புணர்வு

இந்தப் போராட்டம் வெல்லவேண்டும் என்று உரை நிகழ்த்தியவர்கள் தங்கள் உரைகளில் குறிப்பிட்டனர். குறிப்பாக அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் “தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்று வருகின்றபோது அதனை சுட்டிக்காட்டி களத்தில் நிற்கிற தலைவராக திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இருக்கிறார். எத்தனையோ ஜாதிச்சங்கங்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றன. ஆனால் தங்கள் ஜாதிக்குரிய பிரதிநித்துவம் இருக்கிறதா என்று கேட்பதற்கு நாதியில்லை.குறிப்பாக பட்டியல் இனத்தவர்கள்,பிற்படுத்தப்பட்டவர்கள்,குற்றப்பரம்பரை என்று சொல்லப்பட்டவர்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை.இப்பகுதியில் பெரும்பான்மையினராக இருக்கும் கள்ளர் சமூகத்தில் இருந்து ஒருவர் கூட நீதிபதியாக இல்லை.எத்தனையோ திறமையான வழக்குரைஞர்கள் பட்டியிலின,மிகப்பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் இருந்தாலும் அவர்களுக்கு நீதிபதியாகும் வாய்ப்பு இல்லை.அவர்களுக்காக குரல் கொடுக்கும் தலைவராக ஆசிரியர் வீரமணி அவர்கள் இந்த 92 வயதில் தந்தை பெரியார் போல களத்தில் நிற்கின்றார்.நமக்காக உழைக்கின்றார். மிகப்பெரிய அநீதி நிகழ்கின்றது.இதனை ஒன்று சேர்ந்து முறியுடிப்போம்” என்று முழங்கினார். முடிவில் கழகப் பேச்சாளர் அ.வேங்கைமாறன் நன்றி கூறினார்.

யார் – யார்?

ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன், தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி சேகர், கா.சிவகுருநாதன், மாணவர் கழக மாநில செயலாளர் செந்தூர் பாண்டியன், மதுரை புற நகர் மாவட்டத்தலைவர் த.ம. எரிமலை, வழக்குரைஞர் சுஜாதா சித்தார்த்தன், மதிமுக மகபூப்ஜான், பேராசிரியர் சுப பெரியார்பித்தன், திமுக வழக்குரைஞர் தம்பிதுரை, பா. சந்திரமோகன் வழக்குரைஞர் பொன்னையா , வழக்குரைஞர் அமர்நாத் வழக்குரைஞர் யாசின், செல்வம் இராமு சோவியர், மு.மாரிமுத்து க.அழகர், ச.பால்ராஜ், புதூர் பாக்கியம், க.அழகர், தனுஷ்கோடி கா.சிவா, அ.இராஜா, பொ.பவுன்ராஜ், செல்லூர் இளங்கோவன், கோகு.கணேசன், ந.இராஜேந்திரன், ஏ.முத்து, பேக்கரி கடை மணிகண்டன், இபி.முத்தையா, நா. முருகேசன், ராக்கு தங்கம், அல்லிராணி , சுப்பையா ஆட்டோ செல்வம், போட்டோ ராதா கோரா, பெரி.காளியப்பன் சு.மணிராஜ், பெரியசாமி, ச.கமல்நாத், இரா.திருப்பதி, திமுக ஜெ.இரகுவரன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் வழக்கறிஞர்கள் திரளாக கலந்துகொண்டனர்.உச்ச நீதி மன்ற,உயர் நீதி மன்ற மதுரை வழக்குரைஞர்கள் இரவி, சிறீதர், ராஜேந்திரன், டிஜாங்கோ,பாரதி பாண்டியன், அய்யனார், ஆன்ந்த், செல்வராசு, ரவிச்சந்திரன், கணேஷ், யுவராஜ், மகிழ்வேந்தன், ரமேசு, பாண்டி. உள்ளிட்ட 35 வழக்குரைஞர்கள் கலந்து கொண்ட,மற்றும் திராவிடர் கழக, தோழமை இயக்கத்தோழர்கள் கலந்து கொண்ட பெருந்திரள் ஆர்ப்பாட்டமாக, உணர்ச்சிகரமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *