ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஜனவரி 12 முதல் புதிய நடைமுறை

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, டிச.28 ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஜனவரி 12 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. டிக்கெட் முன்பதிவு தொடங்கும் நாளில் ஆதார் சரிபார்க்கப்பட்ட பயனாளர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஏற்ெகனவே தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயமாக்கிய நிலையில் வழக்கமான முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயமாகிறது. முறைகேடுகளை தடுக்க, ஆதார் அட்டை இணைப்பை, ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இடைத்தரகர்கள் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்வதை தடுக்க ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய நடைமுறை டிச.29ஆம் தேதி தொடங்கி படிப்படியாக அமல்படுத்தப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

உண்மையான பயணிகள் மட்டும் முதல் நாளில் டிக்கெட் முன்பதிவு செய்வதை உறுதிசெய்யும் வகையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும். டிக்கெட் கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஏதாவது ஒரு அடையாள ஆவணத்தை காட்டி டிக்கெட் பெறலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் முறை கேடுகளை தடுக்க அய்.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம் என்பது அமலில் இருக்கிறது. இந்த நடைமுறையில் புதிய மாற்றத்தை ரயில்வே வாரியம் கொண்டுவந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *