மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை தொடர்பான குற்றங்கள் தவிர மற்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், அதிகபட்ச சிறைத் தண்டனைக் காலத்தின் பாதி வரை சிறையில் வைக்கப்பட்டிருந்தால் அவர்களை ஜாமீனில் விடுவிக்கலாம். முதல் முறை குற்றவாளிகளாக இருந்தால், அந்தக் குற்றத்திற்காக அதிக பட்சமாக மூன்றில் ஒரு பங்கு சிறைத் தண்டனைக் காலம் வரை சிறையில் வைக்கப்பட்டிருந்தால், விடுவிக்கலாம் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் ஜராவா பழங்குடியினர் அந்தமானில் வசிக்கும் மிக பழைமையான பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜராவா சமூகத்தினர் முதன்முறையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு 19 உறுப்பினர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என தெற்கு அந்தமான மாவட்ட தேர்தல் அதிகாரி அர்ஜுன் சர்மா தெரிவித்துள்ளார். ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும் நிதி முழுவதும் சென்றடைவதை உறுதி செய்ய முதலமைச்சர் தலைமையில் குழு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டச் சட்டத்தின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராக கொண்டு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் மற்றும் மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய மாநில மன்றம் அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது. இந்த மன்றம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்திற்கு திட்டமிடுதல், ஒப்புதல் அளித்தல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல் போன்ற செயற்பணிகளை மேற்கொள்ளும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டச் சட்டத்தின் கீழ் மாவட்ட கண்காணிப்பு குழுவினை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசாரணைக் கைதிகளை விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
