வெற்றி பெற்ற பிறகு பெண்கள் உதவித்தொகை திட்டம் முடக்கம்
மும்பை, ஜன.7 பெண் களுக்கான உதவித்தொகை திட்ட்த்தில் தகுதி இல்லாதவர்கள் நீக்கப்படுவார்களாம். அதுவரை யாருக்குமே பணம் கிடையாது என்று மராட்டிய மாநில அமைச்சர் கூறியுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாட்டின் மகளிர் உரிமைத் தொகை போன்று வட இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் முதலில் லாட்லி பெஹனா (செல்லத் தங்கை) என்ற திட்டம் துவங்கி மாதம் ரூ.1500 வழங்கினார்கள் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு அமைந்த பிறகு பல ஆயிரம் பெண்களுக்கு தொகை வரவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளித்த அம்மாநில அரசு தகுதி இல்லாதவர்களை நீக்கும் பணியைத் துவங்கி உள்ளோம் என்று மட்டுமே கூறியது.
மாநில தேர்தலுக்கு முன்பும் மகாராட்டிரா அரசு லட்கி பஹின் என்ற திட்டத்தை துவங்கியது. முதலில் ரூ 1500 3 மாதமாக வழங்கியது. பின்னர் தேர்தலின் போது இந்த தொகை ரூ 2100 ஆக வழங்கப்படும் என்று அப்போதைய மராட்டிய முதலமைச்சர் ஷிண்டே அறிவித்தார்.
இந்த நிலையில் மீண்டும் அங்கு பாஜக ஆட்சியில் அமர்ந்த்து, தற்போது தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் அங்கு ஆட்சி நடக்கிறது. ஏற்ெகனவே தேர்தல் நடைமுறையைக் காரணம் காட்டி பணம் வழங்குவது நிறுத்தப் பட்ட நிலையில் தற்போது தேர்தல் முடிந்து ஆட்சி அமைந்த பிறகும் பெண் பயனாளிகளுக்குப் பணம் வழங்கப் படவில்லை
புகார்
இது குறித்து அம்மாநில அமைச்சர் அதிதி தட்கரே கூறும் போது, மகளிருக்கு பணம் வழங்கும் திட்டத்தின் பயனாளிகளை சரிபார்க்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. “நாங்கள் இந்தத் திட்டத்தை நிறுத்தவில்லை தேவை இல்லாதவர்களுக்கு பணம் செல்கிறது என்ற புகார்களை நாங்கள் சரிசெய்கிறோம்’’ என்று கூறினார்.
திடீரென பணம் யாருக்கும் வராத நிலையில் இது தொடர்பாக விளக்கம் கொடுத்த முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், இந்த திட்டம் ரத்து செய்யப்படாது. தகுதியற்ற பயனாளிகள் குறித்து நாங்கள் கணக்கெடுக்கிறோம், தகுதி இல்லாதவர்கள் தாங்களே முன்வந்து கைவிடுவார்கள் இது தொடர்பாக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் தகுதி யான நபர்களின் பட்டியல் வந்த பிறகு மீண்டும் திட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.