ஒன்றிய அரசு கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்!

Viduthalai
2 Min Read

ராகுல்காந்தி வலியுறுத்தல்!

புதுடில்லி, ஜன.5 –கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு அதிக நிதி ஒதுக்கவேண்டும் என, மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத் தியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ளசமூக வலைதளப்பதிவில்,“நாட்டு மக்களுக்கு தரமான கல்விக்கு உத்தரவாதம் அளிப்பது என்பது ஒவ்வொரு அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்” என்று கூறியுள்ளார். தனியார் மயமாக்குதல் மற்றும் நிதியுதவி அளிப்பது மூலம் இந்த இலக்கை ஒருபோதும் அடைய முடியாது என்றும் ராகுல்காந்திதெரிவித்துள்ளார். கல்வித் துறைக்குஒன்றிய அரசு முக்கியத்துவம் அளித்து அதிகமான நிதியை ஒதுக்கவேண்டும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதி சபையில்
இந்தியா வம்சாவளி எம்.பி.க்கள் ஆறு பேர்
வாசிங்டன், ஜன.5 அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, 6 பேர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலுடன், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியினர் ஆறு பேர் வெற்றி பெற்றனர். அதில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியா மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி என்ற சாதனையை படைத்தார். இவர் மேனாள் அதிபர் ஒபாமாவின் ஆலோசகராக பணியாற்றியவர்.
இவருடன், ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்களான சிறீ தனேதர் – மிச்சிகனிலும், ராஜா கிருஷ்ணமூர்த்தி – இலினாய்ஸ், ரோ கன்னா – கலிபோர்னியா; அமி பெரா, கலிபோர்னியா; பிரமிளா ஜெயபால் – வாசிங்டனிலும் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளனர். அரிசோனா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமிஷ் ஷா வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அமெரிக்கா பார்லிமன்ட் முறைப்படி செயல்பட துவங்கிய நிலையில், இவர்கள் 6 பேரும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த, 6 பேருக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *