போபால் ஜன.3 சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு போபாலில் 377 டன் விஷ வாயு கழிவுகள் அப் புறப்படுத்தப்பட்டன
விஷ வாயு கசிவு
40 ஆண்டுகளுக்கு முன் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் விஷ வாயு கசிவு ஏற்பட்டது. கடந்த 1984-ஆம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட இரவில் மெத்தில் அய்சோ சயனேட் என்ற வாயு கசிந்ததில் 5,479 பேர் வரை உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் தீவிர மற்றும் நீண்டகால சுகாதார பாதிப்புகளுக்கு ஆளானார்கள். கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி மத்திய பிரதேச உயர் நீதிமன்ற,ம், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் போபாலில் யூனியன் கார்பைடு ஆலை ஏன் இன்னும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது? என அதிகாரிகளை கடிந்து கொண்டது. மேலும் நிகழ்வு நடந்து 40 ஆண்டுகள் ஆன பின்னரும், அதிகாரிகள் மந்த நிலையிலேயே உள்ளனர் என கூறியதுடன், கழிவுகளை வேறிடத்திற்கு கொண்டு செல்ல 4 வார கால அவகாசம் அளித்தது.
எனவேபோபாலில் உள்ள ஆலையில் இருந்து தார் மாவட்டத்தில் உள்ள பீதாம்பூர் தொழிற் பேட்டை பகுதிக்கு ஆலை கழிவுகளை கொண்டு செல்வது என முடிவானது.
இதையொட்டி கடந்த 29.12.2024 அன்றில் இருந்து ஏறக்குறைய 100 பேர் பணியில் ஈடுபட்டனர். 12 சீலிடப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் கழிவுகள் ஏற்றப்பட்டு பசுமை வழித்தடம் வழியே போக்குவரத்து தொடங்கியது. விஷவாயு கழிவுகளை ஏற்றிய வாகனங்கள் 7 மணிநேர பயணத்திற்கு பின்னர், ஆலையில் இருந்து 250 கி.மீ. தொலைவிலுள்ள பீதாம்பூர் தொழிற்பேட்டையை சென்றடைந்தன. அதில் உள்ள தொழி லாளர்களுக்கு 30 நிமி டங்களுக்கு ஒரு முறை ஓய்வு கொடுக்கப்பட்டு அவர்களுக்கு அவ்வப் போது சுகாதார பரி சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.