அரவிந்த் கெஜ்ரிவால் வினா
புதுடில்லி, ஜன.3 வாக்குகளுக்கு பாஜக பணம் அளிப்பதை ஆர்.எஸ்.எஸ். ஆத ரிக்கிறதா என கெஜ்ரிவால் வினா எழுப்பி உள்ளார்.
வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டில்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி விரைவில் அறி விக்கப்பட உள்ளது. டில்லியில் 3 ஆவது முறையாக ஆட்சியை தக்கவைக்க ஆளும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு எழுதி உள்ள கடித்த்தில்,
‘‘கடந்த காலங்களில் பாஜக செய்த தவறு களை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதா? பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பணம் விநியோகம் செய்கிறார்கள். வாக்குகளுக்குப் பணம் கொடுப்பதை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதா? தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் வாக்குகள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கை ஜனநாயகத்துக்குச் சரியானது என்று ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறதா? பாஜக ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என்று எண்ணுகிறதா?” என வினா எழுப்பியுள்ளார்.