ஒன்றிய நிதியமைச்சகம் தகவல்
புதுடில்லி, ஜன.2 இந்தி யாவின் வெளிநாட்டு கடன் ரூ. 60.53 லட் சம் கோடியாக உயா்ந் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் கடன் 4.3 சதவீதம் உயா்ந் துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் வெளி யிட்ட தரவுகளில் தெரி விக்கப்பட்டுள்ளன.
வெளிநாடு கடன்
2024 செப்டம்பரில் இந்தியாவின் வெளி நாட்டுக் கடன் 711.8 பில்லியன் டாலர்களை எட்டியது, இது ஜூன் மாதத்திலிருந்து 4.3 விழுக்காடாக அதிகரித் துள்ளது ஜூன் மற்றும் செப்டம்பர் 2024 க்கு இடையில் வெளிநாட்டுக் கடன் 29.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று இந்தியாவின் காலாண்டு வெளிநாட்டுக் கடன் அறிக்கை எடுத்துக் காட்டியது. ஜூன் 2024 இல் 18.8 விழுக்காடாக இருந்த வெளிநாட்டுக் கடன் மற்றும் ஜி.டி.பி. விகிதம் செப்டம்பர் 2024 இல் 19.4 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நிதிய மைச்சகம் வெளியிட்ட ஜூலை-செப்டம்பா் வரையிலான நாட்டின் கடன் மதிப்பீடு அறிக் கையில், ‘ செப்டம்பா் மாத நிலவரப்படி இந்திய கடன் ரூ.60.53 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ.2.5 லட்சம் கோடி (4.3 விழுக்காடு) உயா்ந்துள்ளது. இதன்மூலம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெளிநாட்டு கடன் விகிதம் கடந்த ஜூன் மாதம் 18.8 விழுக்காடாக இருந்த நிலையில், செப்டம்பா் மாதம் 19.4 விழுக்காடாக உயா்ந் துள்ளது.
அமெரிக்க டாலா் ஆதிக்கம்
இந்த காலகட்டத்தில் அமெரிக்க டாலரில் மேற்கொள்ளப்பட்ட பரிவா்த்தனையின் கடன் மதிப்பு 53.4 விழுக்காடாக உள்ளது. அதற்கு அடுத் தடுத்த இடங்களில் இந்திய ரூபாய் (31.2 சதவீதம்), ஜப்பானின் யென் (6.6 விழுக்காடு), யூரோ (3 சதவீதம்) உள்ளன. அரசுத்துறை மட்டுமின்றி அரசு அல்லாத துறைகளின் வெளிநாட்டுக் கடனும் செப்டம்பா் மாதத்தில் உயா்ந்துள்ளது. வெளி நாட்டுக் கடன் மதிப்பில் ‘கடன்’ 33 விழுக்காடாகவும், பணம் மற்றும் சேமிப்பு 23.1 விழுக்காடாகவும், வா்த்தக கடன் 18.3 விழுக்காடாகவும் கடன் பத்திரங்கள் 17.2 சதவீதமாகவும் உள்ளன என தெரிவிக்கப்பட்டது