மந்தைவெளி, ஜன. 2- 27.12.2024 வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணி அளவில் மந்தைவெளி இரயிலடி மற்றும் செயிண்ட் மேரிஸ் பாலம் சந்திக்கும் இடத்தில் ‘வைக்கம் போராட்ட வெற்றி விழா’ மற்றும் ‘தந்தை பெரியாரின் 51 ஆவது ஆண்டு நினைவு நாளை’ முன்னிட்டும் தென் சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் கழக அறிவிப்பு பலகை திறக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தலை மையிலும்; கழக செயலவை தலைவர் ஆ.வீரமர்த்தினி, மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட் டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், இளைஞரணி மாவட்ட செயலாளர் நா.மணிதுரை, இளைஞர் அணி துணை செயலாளர் இரா.மாரிமுத்து ஆகியோர் முன் னிலையிலும், கழக பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அ.அருள்மொழி அறிவிப்புப் பலகையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், சூளைமேடு நல்.ராமச்சந்திரன், பா.இராஜேந்திரன்(எம்.டி.சி), அரங்க.இராஜா, மகளிர் அணி தலைவர் வி.வளர்மதி, மகளிர் அணி செயலாளர் பி.அஜந்தா, ஜெ.சொப்பனசுந்தரி, ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச் செல்வன், சு.செல்லப்பன் ஆகியோர் கலந்து கொண் டனர்.