மக்களுக்கு விலை உயர்வை புத்தாண்டு பரிசாக கொடுத்த புதுச்சேரி– பாஜக கூட்டணி அரசு
புதுச்சேரி, ஜன. 2 புதுச்சேரியில், பெட்ரோல், டீசல் மீது வாட் வரி உயர்த்தப்பட்டதையடுத்து லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. புத்தாண்டு பரிசாக நேற்று (1.1.2025) முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்தது.
இந்த விலை உயர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என யூனியன் பிரதேசம் முழுவதும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி பெட்ரோல் வாட் வரியானது புதுச்சேரியில் 16.98 சதவிகிதம், காரைக்கால் – 16.99 சதவிகிதம், மாகி- 15.79 சதவிகிதம், ஏனாம் 17.69 சதவிகிதம் என உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் டீசல் மீதான வரி 2சதவிகிதம் என அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது.