காலநிலை மாற்றத்தால் 2024இல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் அய்ரோப்பிய நிறுவனம் ஆய்வறிக்கை

Viduthalai
1 Min Read

புதுடில்லி, டிச.29 காலநிலை மாற்றத்தால் 2024-இல் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவானதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. மேலும், தீவிர காலநிலை நிகழ்வுகள் 3700 பேர் உலகம் முழுவதும் உயிரி ழந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
அதிக வெப்பம்
அய்ரோப்பாவின் காலநிலை கணிப்பு அமைப்பான கோப்பர் னிகஸ், 2024 ஆன் ஆண்டு தான் உலக வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டு. மேலும், இந்த ஆண்டு தான் முதன்முறையாக தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய பன்னாட்டு புவி மேற்பரப்பு வெப்ப சராசரியைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிக வெப்ப நிலையாக பதி வாகியுள்ளது. இதனால் இந்த ஆண்டு உலகளவில் 41 நாட்கள் அதிக வெப்பமான நாளாக அமைந்தன.

இதுவே கடந்த 2023ஆம் ஆண்டு 26 நாட்களாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.
வேர்ல்டு வெதர் ஆட்ரிப்யூஷன் (World Weather Attribution (WWA) மற்றும் க்ளைமேட் சென்ட்ரல் ( Climate Central) மேற்கொண்ட ஆய்வில், காலநிலை மாற்றத்தால் உலகளவில் கூடுதலாக 41 நாட்கள் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. சிறு தீவுகள், வளரும் நாடுகள் இந்த கூடுதல் வெப்ப நாட்களால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், அப்பகுதிகளில் கூடுதலாக 130 வெப்பமான நாட்கள் பதிவாகியுள்ளது என்று அறிக்கையில் குறிப் பிட்டுள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டு 219 தீவிர காலநிலை நிகழ்வுகள் நடந்துள்ளன. தீவிர காலநிலை நிகழ்வுகளால் உலகம் முழுவதும் 3700 பேர் உயிரிழந்துள்ளனர். 26 மோசமான நிகழ்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக சூடான், நைஜீரியா, நைஜர், கேமரூன், சாட் போன்ற நாடுகளில் வெள்ளத்தால் உயிரிழப் புகள் அதிகமாக பதிவா கிள்ளது. தீவிர காலநிலை தாக்கம் தொடர்ந்தால் இந்தப் பகுதிகள் மேலும் இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களை சந்திக்கக் கூடும். 2040-ஆம் ஆண் டுக்குள் பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல் சியஸை கடக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *