காஞ்சிபுரம், டிச. 28- கடந்த 24.12.2024 மாலை 6.00 மணியளவில், காஞ்சிபுரம், ஓரிக்கை மிலிட்டரி சாலை அம்பேத்கர் சிலை அருகில் உள்ள சாய் சண்முகம் அரங்கத்தில், வைக்கம் வீரர் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, வைக்கம் வெற்றி முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரை யும் காஞ்சி மாநகர திராவிடர் கழகத் தலைவர் நா. சிதம்பரநாதன் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றி ஒருங்கிணைத்து நடத்தினார். எழுச்சிப் பாடகர் உலக ஒளி பெரியார், அம்பேத்கர் குறித்த பாடல்களைப் பாடினார்.
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கி. இளையவேள், இணை செயலாளர் சீத்தாவரம் ஆ. மோகன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா. இளம்பரிதி, செயலாளர் அ.வெ. சிறீதர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ. கோவிந்தராஜ், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் போளூர் பன்னீர்செல்வம், வாலாஜாபாத் ஒன்றிய அமைப்பாளர் எஸ். செல்வம், காஞ்சி மாநகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பெ. சின்னத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னிலை வகித்தோர் சார்பில் ஆ. மோகன், பா இளம்பரிதி ஆகியோர் உரை யாற்றினர்.
பங்கேற்றோர்
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் தொகுதி பொறுப்பாளர் ஜே, கமலநாதன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர் சாரதா தேவி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாவட்டப் பொறுப்பாளர் கு. ஆறுமுகம், காஞ்சி அ. தாவூத் (திமுக), தோழர் ரவிபாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் மதி ஆதவன், மூத்த வழக்கு ரைஞர் அப்துல் ஹக்கீம், மக்கள் மன்றத் தோழர் வழக்குரைஞர் ஜெஸ்ஸி, தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் காஞ்சி அமுதன், அறிவு வளர்ச்சி மன்றத்தின் நிறுவனர் நாத்திகம் நாகராசன் ஆகியோர் உரையாற்றினர்.
கழக சொற்பொழிவாளர் முனைவர் காஞ்சி கதிரவன், இந்தியாவில் நடந்த முதல் மனித உரிமைப் போராட்டமான வைக்கம் போராட்டம் குறித்தும், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் இருவருக்குமான தொடர்பு குறித்தும் உரையாற்றினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்குரைஞர் அணி செயலாளர் தா. பார்வேந்தன், பெரியார், அம்பேத்கர் என்ற இருபெரும் சமூகப் புரட்சியாளர்கள் குறித்தும், செயற்பாடுகள் குறித்தும் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றினார்.
திராவிட மாடல் ஆட்சி
கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், வைக்கம் போராட்டம் குறித்த விரிவான செய்திகளைக்குறிப்பிட்டு நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சியை மிகச் சிறப்பாகக் கொண்டாடிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் ஆகியோருக்கும் அமைச்சர் பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்தும், தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்குமான கொள்கைத் தொடர்புகள் குறித்தும், திராவிட மாடல் ஆட்சி நடத்துகின்ற தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்தும் இந்த ஆட்சியைப் பாதுகாப்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற 92 வயது இளைஞராக தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் ஓய்வறியா உழைப்பு குறித்தும் விரிவாகக் குறிப்பிட்டு, பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கு முற்போக்குச் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்து சிறப்பாக உரையாற்றினார். காஞ்சி மாநகர செயலாளர் ச.வேலாயுதம் நன்றி கூறினார்.
கழகக் காப்பாளர் டி.ஏ.ஜி. அசோகன், தலைமைக் கழக அமைப்பாளர் பு. எல்லப்பன், மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேஷ், இ.ரவீந்திரன், அறிவு வழி காணொலி இயக்குநர் அரும்பாக்கம் தாமோதரன், காம்ரேட் பதிப்பகம் பிரபாகரன், தோழர் அருண்குமார், பொதுவுடைமை இயக்கத்தோழர் சீனிவாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அசோக்குமார், தோழர் பெ.பழனி, தோழர் பாரதி விஜயன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் அரங்கு நிறைய அமர்ந்து உரைகளைக் கேட்டு எழுச்சி பெற்றனர்.