‘பெங்களூரு, டிச.27 ஒன்றிய பாஜனதா அரசால் காந்தியாரின் கொள்கைகளுக்கு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சோனியா காந்தி கடித உரையில் குற்றம் சாட்டியுள்ளார்.
காந்தியார் பங்கேற்ற நூற் றாண்டு நினைவு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் மற்றும் மாநாடு பெலகாவியில் தொடங்கியது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவி சோனியா காந்தி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து ெகாள்ளவில்லை. தனது உரை குறித்த கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார். அந்த கடிதம் காரிய கமிட்டிக் கூட் டத்தில் வாசிக்கப்பட்டது. அதில் கூறியுள்ளதாவது:-
திருப்புமுனை
100 ஆண்டுகளுக்கு முன்பு இன் றைய (நேற்றைய) நாளில் காங்கிரஸ் கட்சியின் 39வது காரிய கமிட்டி கூட்டம் பெலகாவியில் காந்தியாரின் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் காங்கிரஸ் கட்சிக்கும், நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கும் திருப்பு முனையாக அமைந்தது. நமது நாட்டின் வரலாற்றில் இந்தக் கூட்டம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. காந்தியாரின் கொள்கைகளை பாதுகாக்க, ஊக்குவிக்க நாம் நம்மை மறுஅர்ப்பணிப்பு செய்கிறோம். நமது உந்துசக்திக்கு காந்தியார்தான் அடிப்படை ஆதாரமாக இருந்துக் கொண்டு இருக்கிறார்.
அச்சுறுத்தல்
டில்லியில் ஆட்சி செய்பவர் களால் அவர்களின் கொள்கைகள், அவர்களால் நிறுவப்பட்டுள்ள அமைப்புகளால் காந்தியாரின் கொள்கைகளுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற் பட்டுள்ளது. அந்த அமைப்பு நமது விடுதலைக்காக போராடவே இல்லை, அவர்கள் விசமத்தனமான சுற்றுச்சூழலை ஏற்படுத்தி இருக்கின்றனர்
அந்தச் சுற்றுச்சூழல் தான் காந்தியாரின் படுகொலைக்கு வழிவகுத்தது. ஆனால் அந்த அமைப்பினர் அந்த கொலை யாளியின் புகழ் பாடுகிறார்கள் காந்தியாரின் பெயரில் செயல்படும் நிறுவனங்கள் நாடு முழுவதும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.
இந்த அமைப்புகளுக்கு எதிராக போராட உறுதிப்பாட்டில் சமரசமின்றி பலத்துடன் நாம் நமது உறுதியை புதுப்பித்துக் கொள்வது, நமது கடமை ஆகும். நமது கட்சியை மேலும் பலப்படுத் துவது குறித்தும், அதில் உள்ள சவால்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று நான் நம்புகிறேன். பெருமைமிகு வரலாற்றை கொண்ட நமது பெரியகட்சி மீண்டு வருகிறது என்பது வெளிப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இருந்து நாம் தனியாகவும், கூட்டாகவும் சவால்களை எதிர் கொண்டு உறுதித் தன்மை யோடு புத்துணர் வுடன் முன்னேறி செல்வோம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.