நவீன தொழில்நுட்ப பரிசோதனை செயற்கைக்கோள்: 30ஆம் தேதி விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ

1 Min Read

பெங்களூரு, டிச.27- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளியில் செயற்கைக்கோள் மற்றும் விண்கலங்களை இணைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்வதற்காக ‘ஸ்பேடக்ஸ்’ என்ற திட்டத்தின் கீழ் 2 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இதனை ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் சிறீஅரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மய்யத்தில் உள்ள 1ஆவது ஏவுதளத்தில் இருந்து வருகிற 30ஆம்்தேதி (திங்கட்கிழமை) இரவு 9.58 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுகிறது. இதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். குறிப்பாக ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி ஓரிரு நாட்களில் தொடங்க இருக்கிறது.

கவுண்ட்டவுன்

இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் வருகிற 29ஆம் தேதி இருக்க வாய்ப்பு உள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சேசர்’ (எஸ்.டி.எக்ஸ்-01) மற்றும் ‘டார்கெட்’ (எஸ்.டி.எக்ஸ்-02) என்ற இரண்டு செயற்கைகோள்களை பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மய்யத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றும் 220 கிலோ எடை கொண்டதாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ராக்கெட் ஏவுவதை நேரில் பார்வையிடுவதற்காக 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த ராக்கெட் ஏவுவதை பார்வையிட விரும்பும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குறித்த விவரங்களை https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ள வேண்டும்’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண