புதுடில்லி, டிச.24- சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் பாப்காா்னுக்கு மூன்று வெவ்வேறு விகிதங்களில் வரி விதிப்பது அபத்த மானது என்றும் இது ஜிஎஸ்டி அமைப்பின் அதிகரித்து வரும் சிக் கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது என்றும் காங்கிரஸ் விமா் சித்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால் மரில் ஒன்றிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் 21.12.2024 அன்று நடைபெற்ற 55-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வெவ்வேறு வகை பாப்காா்னுக்கு பல விகிதங்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது குறித்து விளக்கப்பட்டது.
அதாவது, உப்பு மற்றும் மசாலா சோ்க்கப்படாத பாப்காா்ன் பாக்கெட் டில் அடைக்கப்படவில்லை என்றால், அதற்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டியும், பாக்கெட்டில் அடைக் கப்பட்டிருந்தால் அதற்கு 12 விழுக்காடு ஜிஎஸ்டியும், இனிப்பு சுவையூட்டப்பட்ட (கேரமல்) பாப் காா்னுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என்று கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.
இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜிஎஸ்டியின் கீழ் பாப்காா்னுக்கு மூன்று வெவ்வேறு விகிதங்களில் வரி விதிப்பது அபத்தமானது. இது எளிமையான வரியாகக் கருதப்பட்ட ஜிஎஸ்டி அமைப்பின் அதிகரித்து வரும் சிக்கல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது.
ஜிஎஸ்டி உளவு இயக்குனரகம் (டிஜிஜிஅய்) சமீபத்தில் வெளியிட்ட வரி மோசடிகள் குறித்த தரவுகளின்படி, நிதியாண்டில் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு நடந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும்.
அதேபோன்று, எந்த வா்த்தகத் திலும் ஈடுபடாமல் உள்ளீட்டு வரி திரும்பப் பெறுதலுக்காக மட்டுமே போலி நிறுவனங்களை உருவாக்குவது பரவலாகி வருகிறது. விநியோகச் சங்கிலிகளின் கண்காணிப்பு பல வீனமாக உள்ளது. பதிவு செயல்முறை குறைபாடுகளைக் கொண்டுள்ளது.
ஒன்றிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இன்னும் 40 நாள்களே உள்ள நிலையில், ஒரு முழுமையான மாற்றமாக புதிய ஜிஎஸ்டி முறையை நிறுவ பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் தைரியம் உண்டா?’ என்று பதிவிட்டுள்ளாா்.