புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பேட்டி
புதுச்சேரி, டிச.24 குரல் இல் லாதவர்களுக்கு குரலாக இருப்பது அரசமைப்புச் சட்டம்தான். இந்த தாக்குதலின் முதல்படிதான் அம் பேத்கர்மீது நடத்தப்பட்டுள்ளது என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலை வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் நேற்று (23.12.2024) கட்சியின் புதுச்சேரி தலைமை அலுவல கத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
அம்பேத்கர்
‘‘அம்பேத்கர் முன்னின்று வடிவ மைத்து உருவாக்கிய அரசமைப்பு சட்டத்தால்தான் சமூக நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்பது மக்களின் எண்ணம். அம்பேத்கர் ஸநாதானத்துக்கு எதிராக, சமூக நீதிக்கு ஆதரவான அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில் இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளார். ஆனால் அவரை தாழ்வுபடுத்தும் வகையில் அமித்ஷா பேசியுள்ளார். அம்பேத்கரின் இட ஒதுக்கீடு சட் டத்தால்தான் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் ஓரளவு கல்வியைப் பெற் றுள்ளனர். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது.
கண்ணுக்கு நேராக, மக்களுக்கு நேரடியாக நன்மை செய்யும் இட ஒதுக்கீடு வாய்ப்பினை தந்த யார் ஒருவருமே இறைவன்தான். நம்மோடு சுதந்திரம் பெற்ற பர்மா, வங்கம், பாகிஸ்தான் நாடுகளில் சுதந்திரம் கிடையாது. பல்வேறு தடுமாற்றங்களை சந்தித்து கொண்டுள்ளனர். ஆனால் இந்திய மக்களாகிய நாம் 75 ஆண்டுகளை கடந்தும் சுதந்திரமாக இருப்பதற்கு அம்பேத்கர் எழுதிய அரசமைப்பு சட்டம்தான் காரணம்.
அரசமைப்புச் சட்டம்
மக்களுக்கு கவசமாக, கேடயமாக இருக்க கூடியது இந்திய அரசமைப்பு சட்டம். ஆனால், இந்திய அரசமைப்பு சட்டத்தின் மீது பாஜகவுக்கு நம் பிக்கை உள்ளதா என்பதுதான் கேள்வி. பல்வேறு இடங்களில் இந்திய அரசமைப்பு சட்டத்தை மறுவடிவமைப்பு செய்ய வேண்டும். அவசரமாக நிறைவேற்றிய இந்திய அரசமைப்பு சட்டத்தில் பல்வேறு குறைகள் உள்ளது, நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பேசி வருகின்றனர்.
அதுபோல் இந்திய அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டபோதே ஆர்எஸ்எஸ் இது இந்துக்களுக்கு எந்தவிதமான அம்சங்களும் தரவில்லை என்று கூறியுள்ளனர். அதன் வெளிப்பாடுதான் அமித்ஷாவின் பேச்சு. இன்று அம்பேத்கரை குறை சொல்பவர்கள், நாளை அரசமைப்பு சட்டத்தை குறை சொல்வார்கள். ஸநாதன தர்மத்தில் அரசமைப்பு சட்டம் வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். அதாவது ஜாதி பிரிவு சொல்ல வேண்டும்.
குரலற்றவர்களின் குரல்
இட ஒதுக்கீடு கூடாது என்பதுதான் அவர்களின் ஆழமான எண்ணம். குரல் இல்லாதவர்களுக்கு குரலாக இருப்பது அரசமைப்பு சட்டம்தான். இந்த தாக்குதலின் முதல் படிதான் அம்பேத்கர் மீது நடத்தப்பட்டுள்ளது. இதனை வன்மையாக, முழுமையாக கண்டிக்கிறோம். இது சம்பந்தமாக இந்தியாவில் அனைத்து மாநில, மாவட்ட தலைநகரங்களில் இருந்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்” என்றார்.