கடந்த 4 ஆண்டுகளில் வங்கிகளில் வாங்கிய கடனைத் திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்த பெரும் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் (RTI) மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆர்.பி.அய். பதிலளித்துள்ளது. அதில், 2,664 கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.1,96,441 கோடி திரும்பச் செலுத்தவில்லை என்று கூறியுள்ளது. மேலும் முதல் 100 மோசடியாளர்கள் பெயரை வெளியிட்டுள்ளது. அதில் முதலாவதாக மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி நிறுவன பெயர் உள்ளது.