புதுடில்லி, டிச.20 அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாகக் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் தாக்கீது (நோட்டீஸ்) சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மாநிலங்களவை நடத்தை விதி 188-இன் கீழ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக இதன் மூலம் நான் உரிமை மீறல் தாக்கீது அளிக்கிறேன். மாநிலங்களவையில் நடத்தை விதிகள் விதி 188ன் கீழ் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக சிறப்புரிமை குறித்த அறிவிப்பை நான் இதன்மூலம் அளிக்கிறேன். சபையின் முன்னிலையில் ஏதேனும் தவறான நடத்தை அல்லது தகவலை வெளியிடுவது மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிடுவது ஆகியவை உரிமை மீறல் மற்றும் அவையின் அவமதிப்பு ஆகும் என்பது நன்கு நிறுவப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.