பெங்களூர், டிச.15 ‘‘எடியூரப்பா முதலமைச்சராக இருந்த போது அவரது மகன் விஜயேந்திரா, சிறுபான்மை ஆணையத் தலைவரிடம் ரூ.150 கோடி லஞ்ச பேரம் நடத்தியதாக எழுந்த புகார் மீது பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?” என கருநாடகா முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கருநாடக முதலமைச்சர் சித்தராமையா,” எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது அவரது மகன் விஜயேந்திரர் வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பு அறிக்கை குறித்து மவுனம் காக்க ரூ.150 கோடி பேரம் நடந்துள்ளது.
இந்த பிரச்சனையில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது சந்தேகங்களையும் பல கேள்விகளையும் எழுப்புகிறது. வக்ஃப் சொத்துக் கொள்ளையில் ஈடுபட்ட விஜயேந்திரா உள்ளிட்டோரை பாஜக தலைமை கேடயமாக வைத்திருப்பது ஏன்?
எடியூரப்பா மற்றும் பொம்மையின் கீழ் பா.ஜ.க ஏற்கனவே வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான பதிவு தாக்கீதுகளை வெளியிட்டதில் பெயர் போனது. இப்போது, இந்த லஞ்சக் குற்றச் சாட்டுகள் மற்றும் கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் பாஜகவில் விஜயேந்திராவின் அதிகரித்து வரும் பங்கு, கருநாடகா பாஜகவின் ஏடிஎம் ஆக மாறியுள்ளது” குற்றம்சாட்டியுள்ளார்.