புதுடில்லி, டிச. 13- ஒன்றிய அரசின் கொள்கைகள் பொருளா தாரத்தை மீட்டெடுப்பதில் தோல்வியடைந்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், அரசின் யுக்திகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிகளைக் குறைத்து, ஊதியம் வாங்கும் மத்திய வர்க்கத்தினர் மீது வரியைச் சுமத்துவது முதலீடு மற்றும் பணியமர்த்தல் அதிகரிப்பு இல்லாமல், ஒரு பெரிய அளவிலான ஏகபோகத்தினை உருவாக்கியுள்ளது என்றும் சாடியுள்ளது.
தனியார் துறையின் லாபம்
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஊடகப் பிரிவு செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதி வில் கூறியிருப்பதாவது: தனி யார் துறையின் லாபம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அள வுக்கு உயர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், ஊதியங்கள் அனைத்து துறைகளிலும் 0.8 சதவீதம் முதல் 5.4 சதவீத வளர்ச்சியில் தேக்கம் அடைந்துள்ளது.
வருமானத்தின் பங்கு லாபமாக மூலதனத்துக்குச் செல்வதற்கும், ஊதியமாக தொழிலாளர்களுக்குச் செல்வதற்கும் இடையில் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்று சிஇஏ புத்திசாலித்தனமான பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை அதிரடியாக குறைக்காமல் இருந்திருந்தால் இந்த சமநிலையை கொள்கைகள் மூலமாகவே அடைந்திருக்கலாம்.
இதன் மூலம் ஒன்று தெளிவாகி யுள்ளது. அரசின் யுக்திகள் கார்ப் பரேட் நிறுவனங்களின் வரிகளைக் குறைத்து, பிஎல்அய்-கள் மூலமாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக ஆதாயம் வழங்குவது மற்றும் ஊதியம் வாங்கும் மத்திய வர்க்கத்தினர் மீது வரிச்சுமையை அதிகப்படுத்துவது முதலீடு மற்றும் பணியமர்த்தலில் வெளிப்படையான அதிகரிப்பு இல்லாமல் பெரிய அளவிலான ஏகபோகத்தையே உருவாக்கிறது.
அரசின் இத்தகைய கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியவில்லை. நமது தற்போதையத் தேவை, ஊதியம் வாங்கும் பிரிவின ருக்கு வரி குறைப்பும், ஏழைகளுக்கு வருமானத்துக்கான ஆதரவு அளிப்பதுமே. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.