மலேசிய திராவிடர் கழகம், ஜொகூர் மாநிலத்தின் மாசாய் கிளையின் மேனாள் தலைவர் மானமிகு இரா. நல்லுசாமி அவர்கள் 21.7.2023 அன்று மறைந்தார் எனும் துயரச் செய்தி கேட்டறிந்து வருந்துகிறோம். மலேசிய திராவிடர் கழகத்தின் மூத்த உறுப்பினராக இருந்து கழகப் பணி ஆற்றியவர். ஜொகூர் மாநிலத்தில், மலேசிய திராவிடர் கழகத்தில் தொடக்க காலத்தில் பணியாற்றியவர். இரா. நல்லுசாமி அவர்களின் மறைவிற்கு அவரது மகனார் இளங்கோவிற்கும், குடும்பத்தாருக்கும் மற்றும் கழகத் தோழர் களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
முகாம்:
மலேசியா – கோலாலம்பூர்