பிரயாக்ராஜ், டிச.12- “இது இந்தியா; இங்கு பெரும்பான்மை மக்களின் கருத்துபடி தான் இந்த நாடு இயங்கும்,” என, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கூட் டம் நேற்று நடந்தது. இதில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சேகர் குமார் யாதவ், தினேஷ் பதக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாரிசுரிமை
அப்போது, ‘பொது சிவில் சட்டம்: அரசமைப்பின் தேவை’ என்ற தலைப் பில் நீதிபதி சேகர் குமார் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நம் நாட்டை ஹிந்துஸ்தான் என சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இங்கு வசிக்கும் பெரும் பான்மை மக்களின் விருப்பப் படியே நாடு இயங்க வேண்டும்.
இங்கு, சட்டம் உண்மையில் அவர் களுக்கு ஏற்பவே செயல்படுகிறது. பொது வாக ஒரு குடும்பத்திலோ அல்லது சமூகத்திலோ, பெரும்பான்மையினரின் நலனுக்கும், மகிழ்ச்சிக்குமான நன்மைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
மதம், பாலினம், ஜாதி ஆகியவற்றை பொருட்படுத்தாமல், அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் தனிப்பட்ட சட்டங்களின் தொகுப்பை உருவாக்க, பொது சிவில் சட்டம் முயல்கிறது.
இது திருமணம், தத்தெடுப்பு, வாரி சுரிமை போன்றவற்றை உள்ளடக்கும்.
பிற சமூகத்தில் நடைமுறையில் உள்ள பலதார திருமணம், முத்தலாக் போன்ற நடைமுறைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. எங்கள் தனிச்சட்டம் அதை அனுமதிக்கிறது என்று அந்த சமூகத்தினர் சொன்னால், அதை ஏற்க முடியாது.
நம் சாஸ்திரங்களிலும், வேதங்களிலும் தெய்வ மாகக் கருதப்படும் பெண்ணை நாம் அவமரியாதை செய்ய முடியாது. நான்கு மனைவியர் இருக்க உரிமை கோரவும் முடியாது.
தங்களின் கலாசாரம், மரபுகளை பிற சமூகத்தினர் பின்பற்ற வேண்டும் என ஹிந்துக்கள் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், இந்த நாட்டின் கலாசாரம், சிறந்த ஆளுமைகள் மற்றும் இந்த மண்ணின் கடவுள்கள் அவமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை அவர்கள் நம்புகின்றனர்.
சகிப்புத்தன்மை
நம் நாட்டில் சிறிய விலங்குகளைக் கூட துன்புறுத்தக் கூடாது என கற் பிக்கப்படுகிறது. இதனால் தான், நாம் சகிப்புத்தன்மையுடனும், இரக்கத் துடனும் இருக்கிறோம்.
பிற சமூகங்களில் விலங்குகளை கொன்று அதை உண்ணுகின்றனர். அவர்கள் சகிப்புத் தன்மையுடனும், இரக்கத்துடனும் இருப்பர் என நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?
ஒரு நாடு என்றால் ஒரு சட்டம், ஒரு தண்டனை சட்டம் இருக்க வேண்டும் என்பது தெளிவாகும் நாள் வெகுதுாரத்தில் இல்லை. இதை ஏற்றுக்கொள்ளாமல், தங்கள் சொந்த கொள்கைகளுடன் இருப்பவர்கள் இங்கு நீண்ட காலம் நீடிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.