காஞ்சிபுரம், டிச.10- காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர்
அ.வெ.முரளியின் இல்லமான ஓரிக்கை, குறளகம், தமிழர் தலைவர் கூடத்தில், காஞ்சிபுரம், செய்யாறு கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 8.12.2024 அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறி வாளர் கழகச் செயலாளர்
பா. இளம்பரிதி அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்.
பெரியார் உலகம் குறித்து…
மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் பகுத்தறிவாளர் கழகத்தின் தோற்றம், வளர்ச்சி, சாதனைகள் முதலியவற்றைக் குறிப்பிட்டு, டிசம்பர் 28,29 ஆகிய நாள்களில் திருச்சியில் நடைபெற உள்ள இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாடு குறித்தும், அனைத்துத் தோழர்களும் அம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் கண்ணோட்டம் குறித்தும் பெரியார் உலகம் குறித்தும் உரையாற்றினார்.
தலைமைக் கழக அமைப்பாளர் பு.எல்லப்பன், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ.முரளி, மாவட்டச் செயலாளர் கி. இளையவேள், காஞ்சி மாநகர கழகச் செயலாளர் ச.வேலாயுதம், செய்யாறு கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், செய்யாறு நகர கழகத் தலைவர் தி.காமராசன், கே.பாண்டியன், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் வீ.கோவிந்தராஜ், மாவட்ட மகளிரணி அ.ரேவதி, அறிவு வளர்ச்சி மன்றத்தின் அமைப்பாளர் நாத்திகம் நாகராசன், காஞ்சி அமுதன், பெ. பழனி, எழுச்சிப் பாடகர் உலகஒளி, தோழர் ரவி பாரதி, பல்லவர்மேடு க. சேகர், இரத்தின. பச்சையப்பன், அ.வெ. சிறீதர், ந.சக்திவேலன், சண். கனகசபை, மருத்துவர் குழலரசி, குறளரசன், அ.அருண்குமார் உள்ளிட்ட ஏராளமான பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் தங்கள் பங்களிப்பு பற்றிய கருத்துகளைக் கூறினர்.
நிதி திரட்டலின் அவசியம்
நிறைவாக, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் முனைவர் பா.கதிரவன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின், பெரியாரை உலகமயமாக்கும் செயல்பாடுகள் குறித்தும் மாநாட்டில் பங்கேற்றல், நிதி திரட்டலின் அவசியம் குறித்தும் உரையாற்றினார்.
காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி குறுகிய காலத்தில் கலந்துரையாடல் கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்தமைக்காகப் பாராட்டப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவராக
பா. இளம்பரிதி அறிவிக்கப்பட்டார்.
செய்யாறு கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன் நன்றியுரையாற்றினார்.