தமிழ்நாடு காவல்துறையின் அதிரடி நடவடிக்கை 3 நாட்களில் 70 சைபர் குற்றவாளிகள் கைது

2 Min Read

சென்னை, டி.ச.9- தமிழ்நாட்டில் ‘ஆபரேஷன் திரைநீக்கு’ நடவடிக்கை மூலம் 3 நாட்களில் 70 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரூ.41.97 கோடி இழப்பு

தமிழ்நாட்டில் சைபர் குற்றங் களைக் களையும்வகையில், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் வழிகாட்டுதலின் பேரில் கடந்த 6, 7 மற்றும் 8 ஆகிய 3 நாட்கள் ‘ஆபரேஷன் திரைநீக்கு’ என்ற அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.

‘சைபர் கிரைம்’ கூடுதல் காவல் துறை தலைவர் சந்தீப் மிட்டல் மேற்பார்வையில் இந்த நடவடிக்கையானது ‘சைபர் கிரைம்’ பிரிவால் துல்லியமாக நடத்தப்பட்டு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள், நக ரங்களில் செயல் படுத்தப்பட்டது.

ஒன்றிய உள்துறை அமைச்ச கத்தின் கீழ் இயங்கும் மத்திய ‘சைபர்கிரைம்’ ஒருங்கிணைப்பு மய்யத்தால் உருவாக்கப்பட்ட

‘என்.சி.ஆர்.பி.’ (தேசிய சைபர் கிரைம் அறிக்கை) போர்ட்டல் மற்றும் பிரதிபிம்ப்போர்ட்டல்’ மூலம் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் விவரங்களை ஆராய்ந்து, ‘சைபர் கிரைம் நெட்வொர்க்’குகளின் நிதி தர வுகளின் அடிப்படையில் வங்கி நிதி பாதை இணைப்புகள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டது.

அதில் 158 வழக்குகளில் ஈடுபட்டவர்களை இலக்காக கொண்டு இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இந்த வழக்குகளில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளால் சுமார் 1197 கோடி அளவுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

70 சைபர் குற்றவாளிகள் கைது

மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர்கள் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழுக் கள், தமிழ்நாடு முழுவதும் பல் வேறு சைபர் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 135 முதல் தகவல் அறிக்கைகளில் தொடர்பு டைய 70 ‘சைபர் கிரைம்’ குற்றவாளிகளை கைது செய்தனர்.

இந்த கைதுகள் மாநிலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட சைபர் குற்றங்களை அகற்றுவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பிர திபலிக்கின்றன.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் என்.சி.ஆர்.பி. மூலம் அடையாளம் காணப்பட்ட நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த ‘சைபர் கிரைம்’ நெட்வொர்க் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குற்ற நடவடிக்கைகளின் கூடுதல் விவரங்களை வெளிக் கொணர தமிழ்நாடு காவல்துறை டிஜிட்டல் ஆதாரங்களை பகுப்பாய்வு செய்து, கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சைபர் குற்றவாளிகளின் கூட்டாளிகளை கண்ட றிந்து கைது செய்யவும், மோசடி செய்யப்பட்ட நிதியை மீட்டெடுக்கவும் நாடு தழுவிய சைபர் கிரைம் நடவடிக்கை களுக்கான பரந்த இணைப்புகளை அடையாளம் காணவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *