புதுடில்லி, டிச.7 இலங்கை சிறையில் 486 தமிழ்நாட்டு மீனவர்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 25ஆம் தேதி தொடங் கியது. அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தர பிரதேசத் தில் சம்பாவில் சமீபத்தில் நடந்த வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்கவில்லை. அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விவாதிக்க அனுமதி மறுப்பதாக கூறி அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் தடுப் பதாக குறிப்பிடும் வகையில் கருப்பு ஆடை அணிந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (6.12.2024) பேரணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று (6.12.2024) காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது.
அப்போது அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மக்களவையில் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு மீனவர்கள்
இதையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வெளியுறவு இணையமைச்சர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றிருந்த போது மீனவர் பிரச்சினை குறித்து விவாதித்தார். மீனவர்கள் தொடர்பான கூட்டு பணிக்குழு மூலம் தொடர்ச்சியாக இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை சிறையில் 486, தமிழ்நாடு மீனவர்கள் உள்ளனர். அதே போல பாகிஸ்தானில் 7, பஹ்ரைனில் 37 தமிழ்நாட்டு மீன வர்கள் சிறையில் உள்ளனர் என நாடாளு மன்றத்தில் வெளியுறவு இணையமைச்சர் கீர்த்திவரதன் சிங் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.