புதுடில்லி, டிச.3 வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு கள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் உறுப்பினருமான ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் சூறாவளி யின் பேரழிவு செய்தி அறிந்து கவலை அடைந்தேன். இந்த சோகத்தின் போது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வீடுகள், உடைமை இழந்தவர்களுடன் துணை நிற்பேன்.
மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும், முடிந்தவரை நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பிரியங்கா காந்தி வேண்டுகோள்!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் காங்கிரஸ் தொண்டர்கள் உதவவேண்டும் என்று வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
நிவாரணப் பணிகளில் உதவ முன்வாருங்கள் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு
Leave a Comment