தர்மபுரி, டிச.3- தர்மபுரி மாவட்டத்தில் புயல் மழையால் சேதமடைந்த பகுதிகளை துணை முதலமைச்சர் உதய நிதிஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
தர்மபுரி மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (2.12.2024) மாலை சேலத்தில் இருந்து கார் மூலம் தர்மபுரி மாவட்டத்திற்கு வந்தார்.
தார் சாலையை ஆய்வு
வத்தல் மலைக்கு செல்லும் சாலையில் அடிவாரப் பகுதி யில் ஓடும் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இங்கு நேற்று சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இந்த பகுதியை துணை முதலமைச்சர் உதய நிதிஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்து சாலையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அப்போது நூற்றுக்கணக் கான ஏக்கர் அளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால், உரிய இழப்பீடு வழங்ககோரி, அப்பகுதி விவசாயிகள் துணை முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து அரூர் வாணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டு அரூரில் நிவாரண முகாம் களில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங் கினார். இந்த நிகழ்ச்சிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக் கள் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை
பின்னர், துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற் றும் போச்சம்பள்ளி தாலுகாக் களில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளை அவர் நேரில் சென்று பார்வை யிட்டார். மேலும் மீட்புப் பணி களை துரிதப்படுத்திட அவர் உத்தரவிட் டார்.
தொடர்ந்து பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நிவாரண பொருட் களை வழங்கினார். முன்னதாக ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி தாலுகாக்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தயார் நிலையில் உள்ள மருத்துவ முகாமை அவர் பார்வையிட்டார்.