ஈரோட்டுப் பெரு
நெருப்பை
இன்று
வரை
அணையாமல்
அடை
காக்கும்
தொடர்
விழிப்பில்
தூங்காத
பேருழைப்பர்!
காவிக்குத்
தமிழ்
நாட்டைச்
காவு
கொடுக்காமல்
காப்பாற்றும்
போருழைப்பில்
இந்தியத்தை
வியக்க
வைக்கும்
எம்
அய்யா
நேருழைப்பர்!
நொடிக்கு நொடி
நூல் தடுக்கும்
நோய்ச்
செயல்கள்
அத்தனையும்
நொறுக்கி
விடும்
படிக்கு
இவர்
நூலடுக்கில்
நுட்பங்கள்
பல
படித்த
பேரறிவில்
பெரியாரின்
பெருமிதத்தை
நிலை
நாட்டும்
தாயுழைப்பர்!
பெரியாரைத் தெரியாதார்
பேருலகில்
எவருமிலை
எனுமந்த
ஒளிச் சேர்க்கை
உருவாக்கித்
தந்ததிலே
‘இவன் தந்தை’ எனுமந்த
வள்ளுவனின்
சேயுழைப்பர்!
தொண்ணூறைக்
கடந்தாலும்
தொண்டைக்
கரகரப்புத்
துளியும்
இல்லாமல்
இரவின்றிப்
பகலின்றி
இழையளவும்
சோர்வின்றி
தூய
தலைவர்
வழி
தொண்டாற்றி
வரும்
உங்கள்
தொடர்
உழைப்பை
வணங்குகிறோம்!
எங்கள்
துறைமுகத்து ஏற்புடைய
கலங்கரையே!
உங்கள்
தாலாட்டு நாள் வாழ்த்தி
தந்தை
வழி
நடப்பதற்கே
தங்கள் விரல்பிடிக்கத்
தயங்காமல்
இணங்குகிறோம்!