புதுடில்லி, நவ. 30- கீழமை நீதி மன்றங்களில் கடந்த 11 மாதங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண் ணிக்கை 9 லட்சம் அதிகரித்துள்ளது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப் பட்டது.
9 லட்சம் வழக்குகள்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்றுமுன்தினம் (28.11.2024) கேள்வி நேரத்தின்போது ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- கடந்த ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சமாக இருந்தது. கடந்த 15ஆம் தேதி, இந்த எண்ணிக்கை 4 லட்சத்து 53 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது, 11 மாதங்களில் 9 லட்சம் வழக்குகள் அதிகரித்துள்ளன. அனைத்து நீதிமன்றங் களிலும் மொத்தம் 5 கோடியே 16 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. – இவ்வாறு அவர் கூறினார்.
நீதிபதிகள் சொத்து கணக்கு
மற்றொருகேள்விக்கு பதில் அளித்த அர்ஜுன்ராம் மேக் வால், “நாடாளுமன்ற நிலைக் குழு அளித்த பரிந்துரைப்படி, உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து கணக்கை சமர்ப்பிப்பதை கட் டாயமாக்க சட்டம்கொண்டு வரும் திட்டம் இல்லை” என்று கூறினார்.
மாநிலங்களவை கேள்வி நேரத்தில் ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறைஅமைச்சர் சாவித்ரி தாக்குர் கூறியதாவது:- கரோனாவுக்கு பெற்றோரையோ அல்லது பாது காவலரையோ பறிகொடுத்த குழந்தை களுக்கு ‘குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ்’ திட்டத்தின்கீழ் ஆதரவு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில், 33 மாநிலங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 543 குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பல்கலைக்கழகங்களில் காலியிடங்கள்
மற்றொருகேள்விக்கு பதில் அளித்த சாவித்ரி தாக்குர், “நாடு முழுவதும் அங்கன்வாடி மய்யங்களில் பதிவு செய்யப்பட்ட 5 வயதுக்குட் பட்ட 7 கோடியே 54 லட்சம் குழந்தைகளில் 38.9 சதவீத குந்தைகள் வளர்ச்சி குன்றிய வர்களாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.
மாநிலங்களவை கேள்வி நேரத்தில் ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் கூறியதாவது:- கடந்த அக்டோபர் 31ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் மத்திய பல்கலைக் கழகங்களில் 5 ஆயிரத்து 182 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சிறப்பு ஆள் தேர்வு மூலம், 7 ஆயிரத்து 650 ஆசிரியர் பணியிடங்கள் நிரப் பப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் அதிக உயிரிழப்பு
மாநிலங்களவை கேள்வி நேரத்தில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், “கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து 2024ஆம் ஆண்டுவரை, பொதுமக்கள் குறை தீர்ப்பு இணையதளத் தில் அளிக்கப்பட்ட குறைகளில் 1கோடியே 12 லட்சத்து 30 ஆயிரத்து 957 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மாநிலங்களவை கேள்வி நேரத்தில், ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணைஅமைச்சர் ராம தாஸ் அத்வாலே, “கடந்த 1993ஆம் ஆண்டில் இருந்து, பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தபோது, 1,248 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக, தமிழ்நாட்டில் 253 பேர் இறந்துள்ளனர். மனித கழிவுகளை அகற்றும்போது யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை. அதற்கு மனிதர்களை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் ஆகும்” என்று தெரிவித்தார்.
136 வந்தே பாரத் ரயில்கள்
மக்களவை கேள்வி நேரத்தில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறைஅமைச்சர் டோகான் சாகு, “புதிய நகரங்களை மேம்படுத் தக்கோரி, 23 மாநிலங்களிடம் இருந்து 28 கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அவை பரிசீலனையில் உள்ளன” என்று கூறினார்.
மக்களவை கேள்வி நேரத்தில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “கடந்த 21-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 136 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வருகின்றன” என்று கூறினார்.