மும்பை, நவ.29- மராட்டிய புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்து டில்லியில் கூட் டணி தலைவர்களுடன் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
மராட்டிய சட்டசபை தேர் தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தம் உள்ள 288 தொகுதிகளில், 230 இடங்களை கைப்பற்றி பெரும் வெற்றியை பெற்றது. பா.ஜனதா மட்டும் 132 இடங்களில் வெற்றி பெற்றது. சிவசேனாவுக்கு 57 இடங்களும், தேசியவாத காங் கிரசுக்கு 41 இடங்களும் கிடைத்தன. இதனால் பா.ஜனதாவினர் தேவேந்திர பட்னாவிஸ் முதல மைச்சராக பதவி ஏற்க வேண் டும் என்று கூறி வருகின்றனர்.
முதலமைச்சர் பதவியில் நீடிக்க விரும்பிய சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, திடீரென்று தனது மனதை மாற்றிக்கொண்டார். முதல மைச்சர் பதவி விஷயத்தில் பா.ஜனதாஎடுக்கும் முடிவை ஆதரிப் பேன் என்று கூறினார்.
இதையடுத்து புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோ சிக்க கூட்டணி தலைவர்கள் கூட்டத்துக்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ஏற்பாடு செய் தார். இதற்காக நேற்று பகலில் தேவேந்திர பட்னாவிஸ், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் ஆகியோர் டில்லி சென்றனர். ஏக்நாத் ஷிண்டே இரவில் டில்லி விரைந்தார். அவர்கள் அனை வரும் நேற்று இரவு 10 மணி அளவில் அமித்ஷா வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினர். ஆலோசனையில் பா. ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவும் உடனிருந்தார்.
புதிய முதலமைச்சர் யார்?
அப்போது மராட்டியத்தின் புதிய முதலமைச்சர் பதவி யாருக்கு?, துணை முதலமைச்சர் பதவிகள் யார்-யாருக்கு வழங் கப்பட வேண்டும்?, இலாகா பகிர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்ற தகவல் வெளியான போதி லும், பா.ஜனதா தலைமை மராத்தா சமூகத்தை சேர்ந்த சில தலைவர்களின் பெயர்களை பரிசீலித்து வருவதாகவும் கூறப் படுகிறது.