ஓர் இயக்கத்தையோ, ஒரு காரியத்தையோ செய்வதானால் ஒருவனுக்கு ஏற்படுகிற பெருமைக்கு அளவாகவே சிறுமையும் ஏற்படலாம். பெருமையைக் கண்டு சந்தோஷமடைபவன் சிறுமையைக் கண்டு துக்கப்பட வேண்டியதுதான். எப்படி இருந்தபோதிலும், இவ்விரண்டையும் உத்தேசித்து உறுதியான கொள்கை களிலிருந்து பிறழாமல் இருப்பானே யானால், அவன் ஒரு வகையில் காரியசித்தி அடைந்தவனேயாவான்.
(குடிஅரசு 31.5.1931)