கோட்டைக்குள்ளேயே வெடிக்கிறது!

2 Min Read

பா.ஜ.க.வின் மவுனம்: வெட்கமும், வேதனையும் அடைகிறோம்!

அரியானா – புதுச்சேரி பா.ஜ.க. பிரமுகர்கள் பதவி விலகல்!

புதுச்சேரி, ஜூலை 25 மணிப்பூர் சம்பவத்தைத் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் அறவே இல்லை என்று புதுச்சேரியைச் சேர்ந்த மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் கண்ணன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடை முறைப்படுத்த வேண்டும்

மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் நடந்தேறிய பெண்களுக்கு எதிரான மிகவும் அவமானகரமான செயல் இந்தியர்களை மட்டுமல்ல உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி மிகப்பெரிய கேவலமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கின்றோம். இந்த குரூரமான செயலுக்கு எந்தவிதமான சாக்கு போக்கும் சொல்லாமல் மணிப்பூர் மாநில அரசும், ஒன்றிய அரசும் இந்தக் கொடூரத்துக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு முடிந்தவரை அதை சீர்செய்யும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். மணிப்பூர் முதலமைச்சரைஅந்த பதவியி லிருந்து நீக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியை நடை முறைப்படுத்த வேண்டும். மணிப்பூரில் பெண்குலத்துக்கு இழைக்கப்பட்ட இந்த மாதிரியான கொடூரம் எந்த வகையான மற்ற குற்றங்களுடனும் ஒப்பிடவே கூடாது, முடியாது.  ஏனென்றால் இந்த சம்பவம் பொதுமக்களுக்கு இரண்டரை மாதங்கள் கழித்துதான் தெரியவந்துள்ளது.

அதுவும் அந்த சம்பவத்தின் வீடியோ வைரலான பிறகுதான் எல்லோருக்கும் தெரியவந்தது. இந்த இரண்டரை மாதம் என்பது பல விசாரணைகளுக்கும், கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டியது ஆட்சியாளர் ளின் கடமை. இந்தக் கொடுமையைக் கண்டிக்க எந்த வார்த்தையும் எனக்குக் கிடைக்கவில்லை.காட்டு மிராண்டித்தனமான, மனிதகுலத்துக்கு குறிப்பாக பெண்குலத்துக்கே இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி, கொடூரம், குரூரம். மனசாட்சியுள்ள யாரும் இதைக் கடுமையாக கண்டிக்காமல் இருக்க முடியாது.

இது சம்பந்தமாக என்னுடைய கடுமையான கண் டனங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும், மணிப்பூர் மாநில அரசுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகாரபூர்வமாக இப்போது நான் அறிவிக்க விரும்புவது பா.ஜ.க.வுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும், தொடர்பும் அறவே இல்லை என்பதே. பொதுமக்களுக் கான எனது பணியும், போராட்டமும் என்றும் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம்

இதேபோன்று அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. மகளிரணியின் முக்கிய தலைவர்கள் ஒட்டுமொத்தமாக அக்கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். 

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப் பூரில் நடந்த அந்தக் கொடூரம் எங்கள் வேதனைப்பட வைத்துள்ளது. தொடர்ந்து பா.ஜ.க.வில் இருப்பது குறித்து வெட்கப்படுகிறோம் என்று கூறி பதவி விலகியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *