புதுடில்லி, நவ. 28- இயற்கை பேரிடா்களுக்கு வழிவகுக்கும் வகையில் இமாலய பனிக்கட்டி ஏரிகள் சமீபகாலமாக அதிகரித்து வருவது குறித்து பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு தேசிய பசுமைத் தீா்ப் பாயம் (எனிஜிடி) அறிவிக்கை அனுப்பியது.
அதிகரித்து வரும் வெப்ப நிலை காரணமாக கடந்த 13 ஆண்டுகளில் பனிக்கட்டி ஏரிகளின் எண்ணிக்கை 10.81 சதவீதம் உயா்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை அடிப்படையாகக் கொண்டு இந்த விவகாரத்தை என்ஜிடி தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
கடந்த நவ.19-ஆம் தேதி இந்த விவகாரத்தில் என்ஜிடி தலைவா் நீதிபதி பிரகாஷ் சிறீவாஸ்தவா மற்றும் உறுப்பினா் ஏ.செந்தில் பிறப்பித்த உத்தரவில், ‘கடந்த 2011 முதல் 2024 வரை இந்தியாவில் பனிக்கட்டி ஏரிகளின் மேற்பரப்பளவு 33.7 சதவீதம் உயா்ந்துள்ளதாகவும் செய்தி அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் லடாக், இமாசல பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன.
பனிக்கட்டி ஏரிகளின் பரப்பளவு அதிகரிப்பதால் பெரும் வெள்ளம் ஏற்படுத் துவதற்கான வாய்ப்பும் உருவாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள உள்கட்டமைப்புகள் மற்றும் பல்லுயிர் தன்மைக்கு அதிக பாதிப்புகள் ஏற்படவுள்ளன.
எனவே, இதை கட்டுப்படுத்த அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மேம்படுத்தப் பட்ட பேரிடா் மேலாண்மை முறைகள், கண்காணிப்பு அதிகரிப்பு போன்ற முன்னெடுப்புகளை மேற் கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.
பனிக்கட்டி ஏரிகள் அதிகரித்திருப்பது பல்லுயிர்தன்மை சட்டம், நீா் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் மற்றும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவை மீறப்பட்டிருப்பதை உணா்த்துகிறது. இதுகுறித்து ஒன்றிய சுற்றுப்புறச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலா், ஜி.பி.பந்த் ஹிமாலய சுற்றுப்புறச்சூழல் நிறுவனம் மற்றும் ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பதிலளிக்க வேண்டும்.
அடுத்த விசாரணை நடைபெறவுள்ள 2025, மார்ச் 10-ஆம் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாக மேற்கூறிய அமைப்புகள் பதிலளிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.