தா.பழூர், நவ. 26- அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கழக பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர்கள் சி.காமராஜ், ராஜா அசோகன், பெரியார் பெருந்தொண்டர்
சொ.மகாலிங்கம், மாநில இ.அ.துணைச்செயலாளர் சு.அறிவன் ஆகியோர் முன்னிலையில் 24.11.2024 நண்பகல் 1 மணியளவில் உதயநத்தம் பெரியார் பெருந்தொண்டர் மகாலிங்கம் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஆசிரியர் கலைவாணன் கடவுள் மறுப்பு கூறினார். மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தின் நோக்கங்களை விளக்கி மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், தலைமைக் கழக அமைப் பாளர் க.சிந்தனைச் செல்வன் ஆகி யோர் உரையாற்றினர். திருச்சியில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர்கள் மாநாட்டில் பங்கேற்பது குறித்து மாநில ப.க அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி உரையாற்றினார். தமிழர் தலைவர் அவர்களின் சிறப்புகளை எடுத்து கூறி அவரது பிறந்தநாளை கொள்கை பிரச்சார எழுச்சி நாளாக கொண்டாட வேண்டியது அவசியத்தையும் திருச்சியில் நடைபெற உள்ள பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் சிறப்புகளை விளக்கியும் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். மகளிரணி பொறுப்பாளர் ம.அன்புச் செல்வி நன்றி கூறினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தா.பழூர் ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ்சேகரன் அவர்களின் தாயார் கோவிந்தம்மான், இளைஞரணி பொறுப்பாளர்விளாங்குடி. மணிகண்ட னின் பாட்டி பாப்பம்மாள் ஆகியோர் மறைவிற்கு கூட்டத்தில் இரங்கல் தெரி விக்கப்பட்டது
டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் அரியலூர் மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக சென்னைக்கு சென்று பங்கேற்று தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து விடுதலை சந்தா மற்றும் பெரியார் உலக நிதியை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதென முடிவு செய்யப்பட்டது .
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர்மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்திடுவதெனவும் மரக் கன்றுகள் நடுதல், கழகக் கொடியேற்றுதல உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திடுவதென முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் 28, 29 திருச்சியில் நடை பெறவுள்ள இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆவது மாநாட்டில் அரியலூர்மாவட்டத்திலுள்ள அனைத்து தோழர்களும் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிப்பதுடன் முழு ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
2024 டிசம்பர் மாதம் முதல் அரியலூர் மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டங்களை தொடர்ந்து நடத்துவதென முடிவு செய்யப்பட்டது .
பங்கேற்றோர்
மாவட்ட இணை செயலாளர் இரத்தின. ராமச்சந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் இரா திலீபன், மாவட்டத் துணைச் செயலாளர் பொன் செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் மா. சங்கர் செயலாளர் ஆ இளவழகன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் வெ. இளவரசன், செயலாளர் மா.கருணாநிதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் லெ. தமிழரசன்,, மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு.ராஜா,ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன், தா.பழூர் ஒன்றிய தலைவர் சிந்தாமணி ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம், சூரியநாராயணன், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ் செல்வன், செந்துறை, தா.மதியழகன், சுப்புராயன்,சுந்தரவடிவேல், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, செயலாளர் த.செந்தில், ஆட்டோ தர்மா, கழக பேச்சாளர் வடலூர் புலவர் இராவணன், இந்திரஜித், ஜெயங்கொண்டம் நகரதலைவர் துரை.பிரபாகரன், செயலாளர் கே.எம்.சேகர் ஆயுதகளம் ரங்கராஜன் கிருஷ்ணமூர்த்தி, மீன்சுருட்டி ஆ.சேக்கிழார், வீராக்கன் தென்றல், ஆ.ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.