இதுவரையில் காலம் எப்படிக் கழிந்து இருந்தாலும், இனி மேலாவது மனித சமுதாயம் பயமும் கவலையுமற்றுச் சாந்தியாய், திருப்தியாய் நல்வாழ்வு வாழ வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனி சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும் காலம்.
(‘குடிஅரசு’ – 7.5.1949)