கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கச் சிறப்பு முகாம்கள் சென்னை மாநகராட்சி அறிவிப்பு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜூலை 9 சென்னையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டச் செயலாக்கம் குறித்த ஆலோ சனைக் கூட்டம் நேற்று (8.7.2023) முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடை பெற்றது.  

இது குறித்து சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ”கலைஞர் மகளிர் உரிமைத் திட் டத்திற்குத் தகுதியான பயனாளிகளின் விவரங்களைத் தேர்ந் தெடுக்கும் பொருட்டு பெருநகர சென்னை மாநக ராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் கண்ட றியப்பட்டுள்ளன. 

குடும்ப அட்டைகளின் எண்ணிக் கையின் அடிப்படையில் பள்ளிக் கூடங்கள். சமுதாய நலக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் இரவு காப்பகங்கள் எனத் தேவையான முகாம்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

ஜூலை 3ஆம் வாரம் தேர்வு செய் யப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் நடைபெறும் இடங்களில் குடிநீர் வசதி, மின்விசிறி, மின்வசதி, இருக்கைகள், கழிப்பறை, தீயணைப்புக் கருவிகள், சாய்வு நடைபாதை வசதிகள், முதலுதவிப் பெட்டி வசதிகளும் ஏற்படுத்தப்பட உள் ளன. மேலும், தேவையான இடங்களில் பந்தல்களும், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் போன் றோருக்குத் தேவையான வசதிகளும் ஏற் படுத்தப்பட உள்ளன.” எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *