வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் பெரியார் உலகத்திற்கு மாவட்டக் கழகத் தோழர்கள் மாதந்தோறும் நன்கொடை வழங்க முடிவு!

Viduthalai
2 Min Read

சென்னை, நவ. 20- வடசென்னை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 17.11.2024 அன்று மாலை 6 மணியளவில் அயன்புரம் சு.துரைராசு இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தலைமைக் கழக அமைப்பாளர்
தே.செ.கோபால் தலைமை வகித்தார். மாவட்ட காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், அயன்புரம் தலைவர் சு.துரைராசு முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கழக செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் கடவுள் மறுப்பு கூறி மாவட்ட கழக செயல்பாட்டுப் பணிகள் பற்றி விளக்கி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கி.இராமலிங்கம்,
தி.செ.கணேசன், அயன்புரம் சு.துரைராசு மாவட்ட அமைப்பாளர் சி.பாசுகர், கொடுங்கையூர் தலைவர் கோ.தங்கமணி, செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருட்டிணன், மங்களபுரம் அமைப்பாளர் மா.டில்லிபாபு, கண்மணிதுரை, ச.சஞ்சய், தங்க.தனலட்சுமி, க.அன்புமணி, து.ஜீவரேகா மற்றும் பலரும் மாவட்ட கழகப் பணிகள் பற்றிப் பேசினர்.
வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் நடைபெறவுள்ள மாநாடுகள் குறித்தும், பெரியார் உலக நன்கொடை குறித்தும், தமிழர் தலைவர் ஆசிரியரின் 92 ஆவது பிறந்த நாளையொட்டி கழக ஆக்கப் பணிகள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

கூட்ட முடிவுகள்
நவம்பர் 26இல் ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டிற்கு வடசென்னை மாவட்டத்தி லிருந்து தனிப் பேருந்தில் சென்று கலந்துகொள்வதென முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் 2 – சுயமரியாதை நாள் – தமிழர் தலைவர் பிறந்த நாளையொட்டி பெரியார் உலகம் நன்கொடையாக மாவட்டக் கழகத் தோழர்கள் நபர் ஒன்றுக்கு ரூ.500 வழங்குவதெனவும், அவ்வாறே தொடர்ந்து பெரியார் உலகம் பணிகள் நிறைவுடையும் வரை மாதந்தோறும் ஒரு தோழர் பொறுப்பேற்று, பெரியார் உலகம் நன்கொடையை வடசென்னை மாவட்ட கழகத் தோழர்களிடமிருந்து பெற்று தமிழர் தலைவரிடம் வழங்குவதெனவும் முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் 2 – சுயமரியாதை நாளை யொட்டி சுவரெழுத்துப் பிரச்சாரப் பணிகளோடு, தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி, கழகக் கொடியேற்று விழாவையும் இணைத்து நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

டிசம்பர் 28-29 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெற உள்ள அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டில் வட சென்னை மாவட்டத்திலிருந்து திரளான தோழர்கள் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.
மேற்கண்டவற்றைப் பற்றி தே.செ.கோபால், வழக்குரைஞர் தளபதி பாண்டி யன், புரசை சு.அன்புச்செல்வன் விரிவாகப் பேசினர்.
நிறைவாக கொளத்தூர் ச.இராசேந்திரன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *