தஞ்சாவூர், நவ.20- திராவிடர் கழக தஞ்சாவூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 14.11.2024 அன்று மாலை 6.30 மணி அளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்றது
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன் தொடக்கத்தில் கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், ஈரோடு மாநாடு குறித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழா குறித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் கழகப் பிரச்சார பணிகளை தொய்வின்றி தொடர்ந்து நடந்திட மாதம் ஒரு பிரச்சார கூட்டத்தை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி உரையாற்றினார்.
தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தஞ்சாவூர் மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர இணைச் செயலாளர் இரா. வீரக்குமார், மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.இராமலிங்கம், உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, உரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய செயலாளர் கா.அரங்கராசன், கரந்தை பகுதி தலைவர் விஜயன், கரந்தை பகுதி செயலாளர் தனபால், மாநகர புதிய பேருந்து நிலையப் பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், திருவையாறு ப.க. செயலாளர் தமிழரசன், திருவையாறு ஒன்றிய மகளிரணி செயலாளர் மலர்க்கொடி, உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த. ஜெகநாதன், உரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல். பரமசிவம், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் லெனின், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பாவலர் பொன்னரசு, ப.க. மாவட்ட தலைவர் ச. அழகிரி, மகளிரணி பொறுப்பாளர் அ.கலைச்செல்வி, குலமங்கலம் சின்னையன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் தலையாமங்கலம் ராமதாஸ், உரத்தநாடு தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் மதியழகன், மாவட்ட இணைச் செயலாளர் தீ.வ.ஞான சிகாமணி, மாநில ப.க. அமைப்பாளர் கோபு.பழனி வேல், பள்ளிஅக்ரகாரம் ஜோதிபாசு, அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் ஜவகர், பெரியார் சமூக காப்பு அணி இயக்குநர் தே. பொய்யாமொழி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத்தலைவர் எழிலரசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார், மாநில மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூரப்பாண்டியன், அம்மாபேட்டை ஒன்றிய துணைச் செய லாளர் ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநில தலைவர் மா.அழகிரிசாமி, கழகக் காப்பாளர் மு.அய்ய னார் ஆகியோர் உரையை தொடர்ந்து, நிறைவாக மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை உரையாற்றினார்.
நிறைவாக நகர இளைஞரணி துணைத் தலைவர் பெரியார் செல்வன் நன்றி உரையாற்றினார்
கூட்டத்தில், பகுத்தறிவு ஆசிரியர் அணி மேனாள் தலைவர் பழமார்நேரி மெ.அன்பரசு பிள்ளையார்பட்டி கிளைக் கழக தலைவர் முருகேசனின் தந்தையார் மார்க்கண்டேயன் ஆகியோர் மறைவிற்குக் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது
நவம்பர் 26 ஈரோட்டில் நடைபெறும் ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து தனி வாகனத்தில் குடும்பத்துடன் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிப்பது எனவும்,
டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழாவில் (சுயமரியாதை நாள்) சென்னையில் தஞ்சை மாவட்டத்திலிருந்து பெருந்திரளாகப் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை சந்தா மற்றும் பெரியார் உலக நிதியை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது எனவும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது, மரக்கன்று நடுதல், குருதிக்கொடை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி மகிழ்வது எனவும்,
டிசம்பர் 7 தஞ்சாவூரில் கழகத் துணை பொதுச்செயலாளர் சே.மெ. மதிவதனியும், டிசம்பர் 14 உரத்தநாடு வடக்கு ஒன்றியம் உரத்தநாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்களும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனியும் டிசம்பர் 6 உரத்தநாடு தெற்கு ஒன்றியம் புலவன்காட்டில் இராம. அன்பழகன் பங்கேற்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை மிக எழுச்சி யுடன் நடத்துவது எனவும்,
டிசம்பர் 24 அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது அமைதி ஊர்வலம் நடத்துவது கழகக் கொடி ஏற்றுவது உள்ளிட்ட நிகழ்வு களை தஞ்சை மாவட்டத்தில் மிக சிறப்பாக நடத்துவது தஞ்சை மாநகரில் பெரியார் நினைவு நாள் வீரவணக்க ஊர்வலம் நடத்துவது எனவும்,
டிசம்பர் 28,29 திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆவது மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தோழர்களும் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிப்பதுடன் முழு ஒத்துழைப்பு வழங்கு வது எனவும்,
நவம்பர் 23 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று சிறப்பிக்கும் குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி கோபால்சாமி அவர்களின் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்துவது எனவும் கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது எனவும்,
2024 டிசம்பர் மாதம் முதல் தஞ்சை கழக மாவட்டத்தில் மாதம் ஒரு பிரச்சாரக் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.