மேட்டூர்,நவ.19-மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரை யாடல் கூட்டம் கடந்த 17.11.2024 அன்று சேலம் டால்மியா போர்டு அருகில் உள்ள திராவிடர் கழகத்தின் காப்பாளர் பழநி புள்ளையண்ணன் இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் க.கிருட்டி ணமூர்த்தி தலைமையில் திரா விடர் கழகத்தின் தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா பாலு, காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்ர மணியன் முன்னிலையில், மாவட்ட செயலாளர் ப.கலைவாணன் வர வேற்புரையாற்ற காப்பாளர் பழநி புள்ளையண்ணன் கூட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக விளக்க வுரை ஆற்றினார்.
பின்னர் தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு உள்ளிட்ட அனைவரும் கருத்துரை வழங்கினார்கள்.
கூட்டத்தில், நவம்பர் 26 இல் ஈரோடு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக அனைத்து கழகத் தோழர்களும் கலந்து கொள்வ தெனவும், சென்னை பெரியார் திடலில் வரும் டிசம்பர் 2 இல் ஆசிரியர் அய்யா அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்த பிறந்தநாள் விழாவில் நமது தோழர்கள் கலந்து கொண்டு ‘விடுதலை’ சந்தாவும், திருச்சி சிறுகனூர் ‘பெரியார் உலகத்திற்கு’ நன்கொடை வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனவும்சென்னைக்கு வர இயலாத தோழர்கள் சேலம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனவும்,
திருச்செங்கோட்டில் வரும் 24.11.2024 இல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றும் அய்ம்பெரும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமெனவும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மேட்டூர் நகர தலைவர் இரா.கலையரசன், மேட்டூர் நகர பொருளாளர் சி.சீனிவாசன், மேட்டூர் நகர அமைப்பாளர் கோ.சோமசுந்தரம், மகளிரணி சோ.அமராவதி, லதா, மேட்டூர் கோ.இராதாகிருட்டிணன், குறிஞ்சி அழகன், வெள்ளார் அ.ப.இராசேந்திரன், மாணவர் கழக சு.கபிலன், காளிப்பட்டி ப.அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
முடிவில் பொதுக்குழு உறுப்பி னர் ஓமலூர் பெ.சவுந்தரராசன் அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.