மரு.ச.மருது துரை தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியில் பல உயர் பொறுப்புகளை வகித்தும், கரோனா தொற்றின் போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பிலிருந்து திறம்பட தொடர்ந்து உழைத்து, பல மாறுதல்களைச் செய்து பொதுமக்களுக்கு தொண்டாற்றி கடந்த அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றமை அறிந்து அவரின் மக்கள் தொண்டினைப் பாராட்டும் விதமாக கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களும், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், காப்பாளர் மு. அய்யனார் ஆகியோரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்கள். தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், மேனாள் அமைப்பாளர் வெ.ஞானசேகரன், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், செயலாளர் வழ. துரை. ஸ்டாலின், மேனாள் கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் ரவி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மருத்துவர் ச.மருது துரைக்குப் பாராட்டு
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:மருத்துவர்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
