துறையூர், நவ. 11- துறையூர் விநாயகர் தெரு சமுதாயக் கூடத்தில் 10.11.2024 மாலை 6 மணியளவில் துறையூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
அதில் மாநில ப.க.பொதுச் செயலாளர் வீ.மோகன், ப.க மாநில அமைப்பாளர் தஞ்சை கோபு.பழனிவேல், காப்பாளர் ப. ஆல்பர்ட் மற்றும் மாநில ப. க. அமைப்பாளர் துறையூர் அ.சண்முகம், மாவட்ட கழகத் தலைவர் ச.மணிவண்ணன், மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு, மாவட்ட ப. க. தலைவர் பிரபு, செயலாளர் த.கலைப்பிரியன், அமைப் பாளர் மு. தினேஷ், மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கர், துணை செயலாளர் கருணாகரன், ஒன்றிய கழக தலைவர் வரதராஜ், செயலாளர் பாரதி, லால்குடி ப. க. மாவட்ட செயலாளர் நொச்சியம் பாலசுப்ரமணியம், மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில் குமார், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ரஞ்சித் குமார், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் தன்ராஜ், சர் ஜூன், கபில் தேவ், குணராஜன், சபரி.க.ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வரும் டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெறும் பகுத்தறிவாளர் மாநாட்டிற்கு எஸ். என். புதூர் கருணாகரன் ரூபாய் 5000 வழங்கினார்.
தீர்மானங்கள் படிக்கப் பட்டு நிறை வேற்றப்பட்டன.
துறையூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

Leave a Comment