டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*விவசாயிகளை, தொழிலாளர்களை கொல்லும் ஒன்றிய அரசின் ஆயுதம் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி: ராகுல் காந்தி கடும் தாக்கு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*தெலங்கானா நீதித்துறை நியமனங்களுக்கு தெலுங்கு மொழி கட்டாயம் என அரசின் ஆணையை உறுதிப்படுத்தி நீதிமன்றம் தீர்ப்பு. அதற்கு மாற்றாக உருது மொழி ஏற்புடையது அல்ல என்றும் தீர்ப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “புல்டோசர்கள் மூலம் நீதி என்பது எந்த நாகரீகமான நீதித்துறை அமைப்புக்கும் தெரியாது” மற்றும் “சட்டத்தின் ஆட்சியின் கீழ் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* திமுக, விசிக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி 2017ஆம் ஆண்டு காவிரி நதிநீர் உரிமை போராட்டத்தின் போது உருவானது. இது உறுதியான கூட்டணி; தொடரும் என்று திருமாவளவன் அறிக்கை.
தி டெலிகிராப்:
* எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, வங்கி வாசலில் நின்றிருந்த சர்வேஸ்வரி தேவிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு கஜாஞ்சி (பொருளாளர்) என்று பெயரிட்டார். தற்போது 8 வயது சிறுவனாக வளர்ந்துள்ளான். அவனது பிறந்தநாளை உத்தரபிரதேச மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடி, சிறுவனுக்கு கட்சியின் சின்னமான சைக்கிளை பரிசளித்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தனியார்த் துறையில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க எஸ்.சி., எஸ்.டி. நாடாளுமன்ற குழு முடிவு.
* கனடா நாட்டிற்கு செல்வதற்கான நீண்ட கால விசா முறையில் கனடா அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இது அந்த நாட்டிற்கு செல்ல இருக்கும் வெளி நாட்டவர்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு பெருந்தடையாக இருக்கும் என கருதப்படுகிறது.
– குடந்தை கருணா