சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவிற்கு
தாராபுரம் கழக மாவட்டத்தில் இருந்து குடும்பத்துடன் பங்கேற்க முடிவு
தாராபுரம், நவ. 10- திராவிடர் கழக தாராபுரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 09- 11-2024 சனி மாலை 6:30 மணி அளவில் தாராபுரம் பெரியார் சிலை திடலில் நடைபெற்றது
நகர இளைஞரணி தலைவர் சித்திக் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்
கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார் தலைமை ஏற்று ஈரோடு மாநாடு குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழா குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப் பரிய பணிகளை குறித்தும் எடுத்துரைத்தார்
தாராபுரம் மாவட்டத்தில் கழகப் பிரச்சார பணிகளை தொய்வின்றி தொடர்ந்து நடத்தின வலியுறுத்தி உரை யாற்றினார்
தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் புள்ளியான், பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் திராவிடச்செல்வன், வழக்குரைஞர் சக்திவேல் மடத்துக்குளம் ஒன்றிய செய லாளர் தங்கவேல் ,பகுத்தறிவாள கழக மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் ,செல்வராஜ் ,மனோகரன், முருகேசன் , மாரிமுத்து, தாராபுரம் நகரத் தலைவர் சின்னப்பதாஸ், மாவட்ட செயலாளர் வழக்கு ரைஞர் தம்பி.பிரபாகரன் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை ஆற்றினார் கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நவம்பர் 26 ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் தாராபுரம் கழக மாவட்டத்தில் இருந்து தனி வாகனத்தில் குடும்பத்துடன் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள (சுயமரியாதை நாள்) சென்னைக்கு தாராபுரம் கழக மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை சந்தா பெரியார் உலக நிதியை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தாராபுரம் கழக மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது மரக்கன்று நடுதல் குருதிக்கொடை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி மகிழ்வது என முடிவு செய்யப்பட்டது
டிசம்பர் 24 அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் நினைவு நாள் அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது அமைதி ஊர்வலம் நடத்துவது கழகக் கொடி ஏற்றுவது உள்ளிட்ட நிகழ்வுகளை தாரா புரம் மாவட்டம் மிக சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப் பட்டது
டிசம்பர் 28, 29 திருச்சியில் நடைபெறும் உலக பகுத்தறிவாளர் மாநாட்டில் தாராபுரம் கழக மாவட்டத்திலிருந்து பெறுந்திரளாக பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது
2024 டிசம்பர் மாதம் முதல் தாராபுரம் கழக மாவட்டத்தில் மாதம் ஒரு பிரச்சாரக் கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவது உணவும் முடிவு செய்யப்பட்டது
தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் திடலை புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வண்ணம் தீட்டி புதுபொலிவுடன் பெரியார் திடல் உருவாக பாடுபட்ட மாவட்ட ,நகர பொறுப்பாளர்களுக்கு கூட்டம் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது நன்கொடை அளித்து ஊக்கம் அளித்த அமைச்சர் கயல்விழி செல்வராசு வழக்குரைஞர் செல்வராசு உள்ளிட்ட நன்கொடையாளர்களுக்கும் கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது
புதிய பொறுப்பாளர்
தாராபுரம் நகர கழக செயலா ளராக சித்திக் நியமிக்கப்பட்டார்