திண்டிவனம், நவ.9- திண்டிவனம் மாவட்ட இளைஞரணி கலந்துரை யாடல் கூட்டம் தந்தை பெரியார் படிப்பகத்தில் 2.11.2024 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாநில இளை ஞரணி துணை செயலாளர் தா. தம்பி பிரபாகரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட தலைவர் இர. அன்பழகன், மாவட்ட செயலாளர் செ. பரந்தாமன், ப.க. மாவட்ட செயலாளர் நவா. ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திண்டிவனம் நகர இளைஞரணி தலைவர் ஓவியர் செந்தில் அனை வரையும் வரவேற்று பேசினார்.
தலைமைகழக அமைப்பாளர்
தா. இளம்பரிதி துவக்கவுரையாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி இளைஞரணி செயல் திட்டங்கள் குறித்தும்,எப்படி வலுப்படுத்துவது என்பது குறித்தும் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பொ. தேவராஜ், ஒலக்கூர் ஒன்றிய தலைவர் ஏ. பெருமாள், திண்டிவனம் நகர தலைவர் உ. பச்சை யப்பன்,மரக்காணம் ஒன்றிய தலைவர் ஜெ. கன்னியப்பன், நகர மகளிரணி செயலாளர் தா. தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர். திண்டிவனம் மாவட்ட இளைஞரணி தலைவர்
மு. இரமேஷ் நன்றியுரையாற்றினார்.
கலந்துரையாடலில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரி யர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து ஒன்றியத்திலும் கழகக் கொடி ஏற்றுவது
தெருமுனைகூட்டம், கிராமப்புற பிரச்சாரம், பெரியார் பேசுகிறார் போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துதல், கழக துண்டறிக்கைகளைப் பொதுமக்களிடம் வழங்குதல்
இளைஞரணியை வலுப்படுத்துதல் மற்றும் புதிய தோழர்களை சேர்த்தல்
‘விடுதலை’, ‘உண்மை’ சந்தா சேர்த்தல்
நவம்பர் 26 இல் ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவிற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் தனி வாக னத்தில் இளைஞர்கள் புடைசூழ கலந்து கொள்ளவேண்டும் என தீர்மா னிக்கப்பட்டது.