வயநாடு, நவ.6- வயநாட்டின் சிறந்த மக்களவை உறுப்பினர் என்ற பெயரை பிரியங்கா பெறுவார் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், மக்கள் அனைவருக்கும் சிறந்த சகோதரியாகவும், தாயாகவும், மகளாகவும் பிரியங்கா இருப்பார் என்றார். மேலும், வயநாட்டின் முழுத் திறனையும் வெளிக்கொண்டு வருவதில் அவர் கவனம் செலுத்துவதாகவும், தனது சகோதரியாக அவர் கிடைத்தது பாக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
மன்னராக இருந்தால் என்ன?
சேறு வீசி எதிர்ப்பு தெரிவித்த மக்கள்
ஸ்பெயினின் வேலன்சியா மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையில் 217 பேர் உயிரிழந்தனர். இது மேலும் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற அந்நாட்டு மன்னர் மற்றும் பிரதமர் மீது உள்ளூர் மக்கள் சேறு வீசி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சரியான முன்னெச்சரிக்கை இல்லாதது, மீட்புப்பணி தாமதம் போன்றவையே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்கின்றனர் மக்கள்.
100 வயதை கடந்த வாக்காளர்கள்
2.5 லட்சம் பேர்!
இந்தியாவில் 100 வயதை கடந்த வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 2.5 லட்சம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராட்டிரா மாநிலத்தில் 100 வயதை கடந்தவர்கள் 47,392 பேர் உள்ளனர். உ.பி.யில் 39,000, கருநாடகாவில் 17,937, ராஜஸ்தானில் 17,241, தமிழ்நாட்டில் 16,306 பேர் 100 வயதை கடந்துள்ளனர். நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வரும் நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது.