இணையதளத்தின் மூலம் 30 நாளில் கட்டட அனுமதி தடையின்மைச் சான்று பெறலாம் வீட்டு வசதி துறை அறிவிப்பு

3 Min Read

சென்னை, நவ.6 இணைய வழியில் கட்டட அனுமதியை விரைவாக வழங்கும் வகையில், தடையின்மை சான்று வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் ஒற் றைச் சாளர திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், அதிக பட்சமாக 30 நாட்களுக்குள் உத்தேச தடையின்மை சான்று வழங்குவதற்கான வழி காட்டுதல்கள் வெளியிடப்பட் டுள்ளன.
இதுகுறித்து, வீட்டுவசதித் துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை ஊக் குவிக்கவும், வணிகத்தை எளிதாக மேற்கொள்ளும் வகையிலும், தமிழ்நாடு அரசால் ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் பல்வேறு துறைகளிடம் இருந்து தடையின்மை சான்று வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்யும் வகையில், ஒற்றைச் சாளர திட்டத்தில் தடையின்மை சான்று வழங்கும் துறைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் உத்தேச தடையின்மை சான்று வழங்குதல் என இருவகையாக செயல்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் அரசுக்கு பரிந்துரைத்தார்.
இந்த நடவடிக்கையின் முதல்படியாக 19 துறைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக, உத்தேச தடையின்மை சான்று வழங்கும் வகையில், ஒவ்வொரு துறைக்கும் அதிகபட்ச காலவரையறை வகுக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகளை பரிசீ லித்த தமிழ்நாடு அரசு, திட்ட அனுமதி வழங்கும் வகையில், நிர்ணயிக்கப்பட்ட கால அள வுக்குள் சம்பந்தப்பட்ட துறைகள் தடையின்மை சான்றுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட ஆட்சியர்கள், நீலகிரி தவிர்த்த மற்ற பகுதிகளில் உள்ள புவி யியல் மற்றும் சுரங்கத்துறை, நீர்வளத்துறை, வனத்துறை, மெட்ரோ ரயில், சிட்கோ, வீட்டுவசதி வாரியம், ஓஎன்ஜிசி, வேளாண் துறையினர் 30 நாட்களுக்குள் தடையின்மை சான்று வழங்க வேண்டும்.
தீயணைப்புத் துறையை பொறுத்தவரை உயரமான கட்டடங்கள் என்றால் 30 நாட்கள், இதர கட்டடங்களுக்கு 15 நாட்களுக்குள்ளும், மாநில நெடுஞ்சாலைத் துறை 15 நாட்களுக்குள்ளும் தடையின்மை சான்று வழங்க வேண்டும். மேலும், ஓஎன்ஜிசி, வேளாண்துறை, பாதுகாப்புத் துறை, வீட்டுவசதி வாரியம் ஆகிய துறைகளில் புவியியல் தகவல் அமைப்பு மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

அதேநேரம் விண்ணப்பத்தை நிராகரித்தால் உரிய காரணங் களை பதிவு செய்ய வேண்டும். தடையின்மை சான்று என்பது விண்ணப்பித்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். விண்ணப்பம் பெற்ற நாளில் இருந்து 7 நாட்களுக்குள் அதன் நிலை குறித்து இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால் விண்ணப்பித்த நாளில் இருந்து 10 நாட்களுக்குள் கோரப்பட வேண்டும். விண் ணப்பதாரருக்கு கூடுதல் ஆவ ணம் தயாரித்து வழங்க 10 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். கூடுதல் ஆவணங்கள் பெறப்படாத பட்சத்தில், விண்ணப்பித்த நாளில் இருந்து 30ஆவது நாளிலோ அதற்கு முன்னரோ நிராகரிக்கப்படலாம்.
உத்தேச தடையின்மை சான்று வழங்கப்படும் நாளில், சம்பந்தப்பட்ட துறையின் தலை வர் அதுகுறித்து குறுஞ்செய்தி அல்லது ஒற்றைச்சாளா திட்ட உள்நுழைவு வழியாக தெரி விக்க வேண்டும். மேலும், திட்ட அனுமதியில், உத்தேச தடை யின்மை சான்று அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளது என்பது குறி்ப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

பாதுகாப்புத் துறை, இந்திய விமானப்படை, விமான நிலைய ஆணையம், இந்திய தொல்லியல் துறை, தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், தெற்கு ரயில்வே ஆகியவற்றில் இருந்து தடையின்மை சான்று பெறப்பட வேண்டியிருந்தால், திட்ட அனுமதிக்கு முன்னதாகவே பெறப்பட வேண்டும்.கடற்கரை ஒழுங்கு முறை ஆணையத்திடம் தடையின்மை சான்று பெற வேண்டியிருந்தால், அதை பெற்ற பின்னரே கட்டட அனுமதி வழங்கப்பட வேண் டும். சம்பந்தப்பட்ட நிலத்தில் மின்வாரியத்தின் மிக உயர் அழுத்த மின்தடங்கள் செல்லுமாயின், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தடை யின்மை சான்று பெற வேண்டும். இந்த விதிகளை திட்ட அனுமதி வழங்கும் அமைப்புகள், நகர ஊரமைப்பு இயக்ககம் ஆகியவை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *